35
 

ஐயப் பொருள்தரு மிடைச்சொல். உணரா - ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.

(38)

கொடுவரி பாயத் துணையிழந் தஞ்சி
கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு
நெடுவரை யத்த மிறப்பர்கொல் கோண்மாப்
படுபகை பார்க்குஞ் சுரம்.

[இதுவு மது.]

(பத.) கொடுவரி - புலியானது, பாய - பாய்தலினாலே, துணை இழந்து - தனது துணையாகிய பிடியினைப் பறிகொடுத்து, அஞ்சி - அச்சமிகுந்து, (அப்பாற் சென்று,) கடு - மாவிலங்குமரம், உணங்கு - வாடி நிற்கும், பாறை - பாறைகளுக்கு இடையேயுள்ள, கடவு - வழியினிடத்தே, தெவுட்டு - நிறைத்து நிற்கும்படியான, கோண்மா - களிறானது, படு பகை - (தனது துணையினைப்) படுத்த புலியாகிய பகையின் வரவினை, பார்க்கும் - எதிர்பார்த்திருக்கும் படியான, சுரம் - பாலை நிலத்தின்கண்ணுள்ள, நெடு வரை - நீண்ட மலைத்தொடர்களுடைய, அத்தம் - அருநெறிக்கண்ணே, இறப்பர் கொல் - (காதலர்) நடந்து செல்வரோ ? (என்று தலைமகள் ஐயுற்றுத் தோழியிடம் கூறினாள்.)

(விரி.) கொல் - ஐயப்பொருள் கொண்டது. படுபகை - வினைத்தொகை.

(39)

மன்ற முதுமரத் தாந்தை குரலியம்பக்
குன்றக நண்ணிக் குறும்பிறந்து - சென்றவர்
கள்ளிய தன்மையர் போலு மடுத்தடுத்
தொள்ளிய தும்மல் வரும்.


[தலைமகனின் வருகையினை எதிர்நோக்கிக் கலங்கிய
தலைமகட்குத் தோழி நிமித்தங் காட்டிக் கூறியது.]