36
 

(பத.) குன்று அகம் - மலையிடத்தினை, நண்ணி - நெருங்கிச் சென்று, குறும்பு இறந்து - பாலைநிலத்தூர் பலவற்றைக் கடந்து, சென்றவர் - (பொருள்வயிற்) பிரிந்த நந்தலைவர், மன்ற - மன்றின் கண்ணுள்ள, முதுமரத்து - ஆலமரத்தில் வாழும், ஆந்தை - ஆந்தையானது, குரல் இயம்ப - ஒலிக்க, அடுத்து அடுத்து - அடிக்கடி, ஒள்ளிய - நலமிகுந்த, தும்மல் - தும்மலானது, வரும் - (நம்மிடத்துத்) தோன்றாநின்றதாதலின், கள்ளிய தன்மையர் போலும் - களவின் கண் நம்மாட்டு அவர் கொண்ட கடுங்காதல் போன்று இஞ்ஞான்றுங் கொண்டு மீள்வர்போற் காண்கின்றது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

(விரி.) சென்றவர், ஆந்தை இயம்ப, தும்மல் வருதலின், கள்ளிய தன்மையர் போலும், என முடிக்க. “ஒள்ளிய தும்மல்,” என்றமையின் நன்னிமித்தம் எனலாயிற்று. அடுத்து அடுத்து - அடுக்குத் தொடர் : மிகுதிப்பொருள் பற்றியது.

(40)

பூங்கணிட மாடுங் கனவுந் திருந்தின
வோங்கிய குன்ற மிறந்தாரை யாநினைப்ப
வீங்கிய மென்றோள் கவினிப் பிணிதீரப்
பாங்கத்துப் பல்லி படும்.

[இதுவு மது.]

(பத.) ஓங்கிய - வானளாவிய, குன்றம் - குன்றுகளாகிய பாலை நில வழியே, இறந்தாரை - கடந்து சென்ற நங்காதலரை, யாம் நினைப்ப - நாம் நினைத்த வளவிலே, பூம் கண் - நம் அழகிய கண்களிலே, இடம் ஆடும் - இடக்கண்ணானது துடித்தாடாநின்றது, கனவும் - நாம் காண்கின்ற கனவுகளும், திருந்தின - நற்பொருளுடையனவாயுள்ளன, வீங்கிய - அவற்றால் பூரித்த, மெல்தோள் - நம் மெல்லிய தோள்கள், கவினி - அழகுற்று, பிணிதீர - நோய் நீங்கும் வண்ணம், பல்லி - பல்லியானது, பாங்கு - இணக்க