மாக, படும் - நிமித்தஞ் சொல்லாநின்றது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.) (விரி.) பெண்மக்களுக்கு இடக்கண்ணாடல் நன்னிமித்தம் என்பது பழைய நூல் வழக்கு. அத்து - சாரியை. (41) ஒல்லோமென் றேங்கி யுயங்கி யிருப்பளோ கல்லிவ ரத்த மரிபெய் சிலம்பொலிப்பக் கொல்களி றன்னான்பின் செல்லுங்கொ லென்பேதை மெல்விரல் சேப்ப நடந்து. [உடன்போய தலைமகட்கு நற்றாய் கவன்றுரைத்தது.] (பத.) என்பேதை - என்மகள், கொல்களிறு அன்னான் - கொல்கின்ற ஆண்யானையை யொத்தவனாகிய தலைமகனின், பின் - பின்னாக, அரி - சிறுகற்கள், பெய் - பெய்யப் பெற்றுள்ள, சிலம்பு - காற்சிலம்புகள், ஒலிப்ப - ஓசையிடவும், மெல்விரல் - மெல்லிய கால்விரல்கள், சேப்ப -சிவக்கும்படியாகவும், கல் - கற்கள், இவர் - மேலெழுந்து நிற்கும்படியான, அத்தம் - பாலை நிலவழியே, நடந்து - நடத்தலைச் செய்து, செல்லும் கொல் - செல்வாளோ ? (அன்றி,) ஒல்லோம் என்று - (இப்பாலை நிலவழியே) செல்லுதல் நம்மால் முடியாத காரியமென்று நினைத்து, ஏங்கி - வருந்தி, உயங்கி - வாடி, இருப்பளோ - துன்புற்றுத் தங்குவளோ ? (யாதோ அறியேன் என்று, நற்றாய் தனக்குட்டானே கூறிவருந்தினள்.) (விரி.) அரி - சிலம்பினுட் பெய்யும் சிறு கற்கள். உடன்போதல் - தலைவனுடன் பாலை நிலவழியாகப் புறப்பட்டுப் போகுதல். (42) பாலை முற்றும்.
|