அவன் பிரிந்தானாயினும் வாடுதலை மறந்தன என்றோள்கள். (விரி.) கல் - மலை. ததும்பல் - நிறைதல். நயம் - வாய்மை இரக்க முதலிய நற்பண்புகள். வரைவு தலைவால் - தலைமகனைச் சார்ந்தார் மணம் பேசி வரல். தலைமகனைத் தலைமகள் நயமுடையன் என்றதனால் வரைவு தலைவந்தமை பெறலாயிற்று. தலைவனின் வாய்மை முதலிய நற்பண்புகள் தலைவிக்கு அவன் வரைவுகாரணமாகப் பொருள்வயிற் பிரிந்த காலத்தும் மனக்கலக்கத்தை விலக்கி வென்பார் “நீப்பினும் வாடன் மறந்தன தோள்,” என்றார். இச்செய்யுளை இளம்பூரணர், வரைவு தலைவந்தவழித் தலைமகள் கூறியதற்கு மேற்கோளாகக் கூறுவர் (தொல். பொருள். கள. 21.) நச்சினார்கினியர், ‘நீப்பினும்,’ என்றதனால் தலைமகன் மாட்டுப் பரத்தமை கூறினாள் என்பர். வரைவுக்குப் பின்னர் கற்பில் பரத்தமை கூறல் சிறப்பாமன்றிக் களவின்கட் பரத்தமை கூறலும் செயலுங் காதற் புணர்ச்சிக்கு மாறாமாகலான், ‘நீப்பினும்,’ என்றதற்கு வரைவுகாரணமான முலைவிலைக்குப் பொருள் தேடப் பிரிந்தமை கூறப்பட்டது. இது தோழி முதலாயினார் அறத்தொடு நின்று தைமைகளின் வரைவினை எதிர்நோக்கிய காலத்து வரைவு தலைவந்தமை கூறியதாகும். (2) இலையடர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்த ளினவண் டிமிரும் வரையக நாடனும் வந்தான்மற் றன்னை அலையு மலைபோயிற் றின்று. [தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது.]
(பத.) இலை - தழைகள், அடர் - நிறைந்துள்ள, தண் - குளிர்ந்த, குளவி - காட்டு மல்லிகைக் கொடிகள், ஏய்ந்த - பொருந்திப் படர்ந்துள்ள, பொதும்பில் - சோலைகளினிடத்தேயுள்ள, குலையுடை
|