40
 

(பத.) பாண - பாணனே ! கழுத்தில் - (தலைமகன் முன்பு தழுவியமைந்த) எமது கழுத்தினிடத்தே, போத்து இல் - இனித் தழுவதற்கு நேரமின்றி, புதல்வன் - என் மகன், உண - முலையுண்ணும்படி, சான்றான் - அமைந்துளான், இனி - மேலும், யாம் - நாம், மூத்தேம் - தலைமகற்குத் தகுதியின்றி மூப்பினையடைந்தோம், (ஆதலின்,) நீ நீத்து - நீ இவ்விடத்தினின்று நீங்கி, வருமுலையார் - முன்னோக்கி வளருகின்ற முலைகளையுடைய பரத்தையரது, சேரியுள் - சேரியினிடத்தே, போய் - சென்று, மொழி - (அங்குள்ள தலைமகனுக்கு எமது மூப்பு முதலிய செய்திகளை) இயம்புவாயாக, (அன்றி) நீர் - கள் முதலிய குடிநீர்வகைகளையும், ஊன் - இறைச்சிகளையும், அவாய் - விரும்பி, கூத்து ஆடி - பரத்தையர் முன்பாக நாடக முதலியனவற்றை நடத்தி, உண்ணினும் - உண்ணுதலைச் செய்யினும், உண் - செய். (என்று தலைமகள் பாணனிடம் கூறினாள்.)

(விரி.) போது = போத்து - பொழுது ; விரித்தல் விகாரம், வருமுலை - வினைத்தொகை.

(45)

உழலை முருக்கிய செந்நோக் கெருமை
பழனம் படிந்துசெய் மாந்தி - நிழல்வதியுந்
தண்டுறை யூரன் மலரன்ன மாற்புறப்
பெண்டிர்க் குரைபாண! உய்த்து.

[இதுவு மது.]

(பத.) பாண - பாணனே ! உழலை - உழலை மரத்தினை, முருக்கிய - நாசப்படுத்திய, செந்நோக்கு - சிவந்த கண்களையுடைய, எருமை - எருமையானது, பழனம் படிந்து - மருத நிலத்தூடே தவழ்ந்து சென்று, செய் - கழனியிலே, மாந்தி - மேய்ந்து, நிழல் - (மருதமர) நிழலின் கண்ணே, வதியும் - தங்கியிருக்கும்படியான, தண் - குளிர்ந்த, துறை - இடத்தினையுடைய, ஊரன் - ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனது, மலர் அன்ன - (வண்டுகள் பல படியும் வண்ணம் மலர்ந்து கிடக்கும்) மலர்போன்ற, மால் - காதலினை, உய்த்து