42
 

தலைமகளின் இல்வாழ்க்கைச் சிறப்பினை நேரிற் கண்ட செவிலி நற்றாய்க்குக் கூறியதாகு மிச் செய்யுள்.

(47)

பேதை புகலை புதல்வன் றுணைச்சான்றோ
னோதை மலிமகிழ்நற் கியாஅ மெவன்செய்தும்
பூவார் குழற்கூந்தற் பொன்னன்னார் சேரியு
ளோவாது செல்பாண ! நீ.

[தலைமகள் பாணற்கு வாயின் மறுத்தது.]

(பத.) பாண - பாணனே ! ஒதை - பல்வகை யொலிகள், மலி - மிகுந்த, மகிழ்நற்கு - மருதநிலத் தலைவனாகிய தலைமகனுக்கு, புதல்வன் - மகனையே, துணை சான்றோன் - (பிரிவின் கண்) துணைவனாகிய சான்றோனெனும், புகல் - அடைக்கலமாகக் கொண்ட, பேதை - பெண்பாலாகிய, யாம் - நாம், எவன் செய்தும் - என் செய்து பயன்படப் போகின்றோம் ? (அவற்கு எம்மால் ஆவது யாதுமின்று,) பூஆர் - பூக்கள் நிறைந்த, குழல் கூந்தல் - சுருட்டி முடித்த மயிரினையுடைய, பொன் அன்னார் - திருமகளை யொத்தவராகிய (அவற்கு வேண்டிய) பரத்தையரின், சேரியுள் - சேரியினிடத்தே, ஓவாது - ஒழியாது, நீ செல் - நீபோவாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

(விரி.) புகலை - ‘ஐ,’ சாரியை. மகிழ்நன் - மருதநிலைத்லைவன், எவன் - அஃறிணை வினாவினைக்குறிப்புமுற்று. மகிழ்நற்கியாஅம் - குற்றியலிகரம் அலகு பெற்றிலது ; இசைநிறையளபெடை கொண்டுளது. பரத்தையரைப் பொன்னன்னார் என்றது இழித்தலோடு கூடிய குறிப்பு மொழியாம்.

(48)

யாணர்நல் லூரன் றிறங்கிளப்ப லென்னுடைய
பாண ! இருக்க வதுகளை - நாணுடையான்
றன்னுற்ற வெல்லா மிருக்க விரும்பாண !
நின்னுற்ற துண்டே லுரை.