43
 

[இதுவு மது.]

(பத.) என்னுடைய பாண - என்னருமைப் பாணனே ! இருக்க - இவ்விடத்தே இருப்பாயாக, யாணர் - புது வருவாயினையுடைய, நல் ஊரன் - நல்ல மருதநிலத்தூர்த் தலைவனது, திறம் - மேன்மையினை, கிளப்பல் - (பலபடியாகஎடுத்துச்) சொல்லுதலாகிய, அது - அப்போக்கினை, களை - ஒழித்து விடுவாயாக, இரும் பாண- பெருமைமிக்கபாணனே ! நாண் உடையான் - (பிறபெண்டிரைக் காணுதலில்) வெட்கமுற்றுப் பின்வாங்கும் பெருமையினையுடைய தலைமகனுக்கு, உற்ற எல்லாம் - நேர்ந்த குறைகளெல்லாம், இருக்க - இருக்கட்டும், நின் - உனது வாழ்க்கையில், உற்றது - பொருந்திய குறை யாதேனும், உண்டேல் - உளதாயின், உரை - எடுத்துச் செல்வாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

(விரி.) “நாணுடையான்,” என்றது இழித்தல் கருதிய குறிப்பு மொழி. கிளப்பல் - கிளத்தல் ; சொல்லல்.

(49)

ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழு மூரனை
யுள்ளங்கொண் டுள்ளானென் றியார்க்குரைக்கோ- வொள்ளிழாய் !
அச்சுப் பணிமொழி யுண்டேனோ மேனாளோர்
பொய்ச்சூ ளெனவறியா தேன்.


[தலைமகன் பரத்தையிற் பிரியத் தலைமகள் புலந்து
சொல்லியது.]

(பத.) ஒள் இழாய் - ஒளியினையுடைய அணிகலன்களையணிந்த தோழியே ! மேல் நாள் - (களவுப்புணர்ச்சி நிகழ்ந்த) அக்காலத்திலே (கூறிய உறுதி மொழிகள்,) ஓர் பொய் சூள் - பலரும் நினைவிலிருத்தக் கூடிய வஞ்சக மொழிகள், என - என்று, அறியாதேன் - தெரிந்து கொள்ள முடியாத யான், பணிமொழி - அக்காலத்தே (தலைமகன்) பணிவுடன் கூறிய அவ்வுறுதி
மொழிகளை,