44
 

அச்சு - எழுத்துவடிவமாக, உண்டேனோ - (எழுதித்தரப்பெற்றுக்) கொண்டேனுமில்லை, (அங்ஙனமிருக்க, இப்பொழுது) ஒள் இதழ் - நிறமிக்க இதழ்களையுடைய, தாமரை போது - தாமரைப் பூக்கள், உறழும் - இடையிட்டுக் கிடக்கும், ஊரனை - ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனைப்பற்றி, உள்ளங் கொண்டு - மனமுழுவதையு மொன்று சேர்த்து, உள்ளான் - (என்னை) எண்ணுவதில்லை, என்று - என்பதாக, யார்க்கு - எவரிடத்தில், உரைக்கோ - (குறை) கூறிக்கொள்ளட்டும்? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

(விரி.) உரைக்கு - தன்மை யொருமை வினைமுற்று. ஓ - இரக்கபொருள் கருதியது. ஓர் - நினைவு ; முதனிலைத் தொழிற் பெயர். உண்டேனோ - ஓ எதிர்மறைப் பொருளது. புலத்தல் - ஊடல். என்றியார்க்கு - குற்றியலிகரம் அலகு பெற்றிலது.

(50)

பேதைய ரென்று தமரைச் செறுபவோர்
போதுறழ் தாமரக்கண் ணூரனை நேர்நோக்கி
வாய்மூடி யிட்டு மிருப்பவேர் மாணிழாய் !
நோவதென் மார்பறியு மின்று.


[இதுவு மது.]

(பத.) ஏர் - அழகிய, மாண் - மாட்சிமைப்பட்ட, இழாய் - அணிகலன்களை யணிந்த தோழியே ! தமரை - தம்மவராகிய தலைமகனாரைக் (காணாவிடத்து அவராற் காதலிக்கப்படும் பரத்தையர்,) பேதையர் என்று - அறிவிலாரென்று திட்டி, செறுப - சினத்தை மேற்கொள்வர், ஓர் - ஒப்பற்ற, தாமரை போது - தாமரைப் பூக்கள், உறழ் - இடையிட்டுக் கிடக்கும்படியான, கண் - இடத்தினையுடைய, ஊரனை - மருத நிலத்தூர்த் தலைவனாகிய தலைமகனை, நேர் நோக்கி - எதிரே பார்த்தவளவில், வாய் மூடி யிட்டும் - அடங்கியும், இருப்ப - இருப்பார்கள், (அங்ஙனம் வஞ்சகர்களாகிய அவர்களை நாடித் தலைமகனார் பிரிந்து சென்றது) இன்று - இப்பொழுது, நோவது - மிகுதியும் மன நோயினைச் செய்யா நின்றது