45
 

(அந்நோயின் கொடுமை வாய் விட்டுக் கூறுந்தரத்ததன்று,) என் மார்பு - என்னெஞ்சமே, அறியும் - (அதனைத்) தெரியுந் தரத்தது. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(விரி.) செறுப, இருப்ப - பலர்பால் படர்க்கை வினைமுற்றுக்கள். மாணிழை - பண்புத்தொகையன்மொழி.

(51)

காதலிற் றீரக் கழிய முயங்கன்மி
னோதந் துவன்று மொலிபுன லூரனைப்
பேதைப்பட் டேங்கன்மி னீயிரு மெண்ணிலா
வாசை யொழிய வுரைத்து.

[பரத்தையரும் ஏனைத்தலைவியரும் தம்முறுவிழுமம் கூறிய
பொழுது தலைமகள் அவர்கண்மாட்டுப் பரிந்து கூறியது.]

(பத.) நீயிரும் - யானே யன்றி நீங்களும், ஓதம் - வெள்ளமானது, துவன்றும் - நெருங்கி மிகுதலானுண்டாகிய, ஒலி - ஒலிக்கின்ற, புனல் ஊரனை - நீர்வளமிக்க மருதநிலத் தலைவனாகிய நம் தலைமகனை, காதலின் - உள்ளன்பின் மிகுதியினின்று, தீர - முழுவதும், கழிய - நீங்கும்படியாக, முயங்கன்மின் - இனித் தழுவாதிருப்பீர்களாக, பேதைபட்டு - அறியாமையிலே அகப்பட்டு, எண் இலா - அளவில்லாத, ஆசை - தலைமகனது விருப்பம், ஒழிய - நீங்கும்படி, உரைத்து - (காதன் மொழிகள் பல) கூறி, ஏங்கன்மின் - (தலைமகன்மாட்டுக்) குறையிரக்கா திருப்பீர்களாக. (இங்ஙனம் சில காலம் நாம் ஒற்றுமையாக இருப்போமாயின், தலைமகன் முன்போல் நம்மாட்டுக் காதல் கொண்டு ஒழுகுவன், என்று தலைமகள் தன் மாட்டு வந்து, தலைமகனின் அன்பின்மையினை எடுத்துச் சொன்ன பரத்தையரிடத்தும், ஏனைத் தலைவியரிடத்தும் கூறினாள்.)

(விரி.) தம்முறு விழுமம் - தாமுற்ற துன்பம். தலைமகன் தன் வினைமிகுதியாற் சிற்றின்பங் கருதானாக, அக்காலத்துப் பரத்தையர் முதலோர் தலைமகள்மாட்டு முறையிட்டுக் கொள்ளத்