48
 

சிறுவன் - என் புதல்வனாகிய சிறுவனை, துணை - பாது காவலாக, உடையேன் - கொண்டுளேன், (ஆகலின்,) பொய்கை - நல்ல நீர் நிலைகளையுடைய, நல் ஊரன் - நல்ல மருத நிலத்தலைவனாகிய தலைமகனின், திறம் - ஒழுக்க முறைகளை, கிளத்தல் - எடுத்தியம்ப வேண்டா, என்னுடைய எவ்வம் எனினும் - (தலைமகன் பிரிய நேரிட்டது) எனது தவறேயாயினும், (ஆகட்டும்,) எழுந்தீக - (இவ்விடத்தை விட்டு) எழுந்து நடப்பாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

(விரி.) கிளத்தல் - எதிர்மறை வியங்கோள். எழுந்தீக - வியங்கோள் வினைமுற்று. தொடி - தானியாகு பெயர். அன்றி, ‘பொலந்தொடி’, எனத் தொடுத்து மொழிந்து பண்புத்தொகை யன்மொழியாக்கினுமாம்.

(55)


வளவய லூரன் மருளுரைக்கு மாதர்
வளைஇய சக்கரத் தாழி - கொளைபிழையா
வென்றிடை யிட்டு வருமேனின் வாழ்நாட்க
ளொன்றி யனைத்து முளேன்.


[பரத்தையிற் பிரிந்த தலைமகனின் வரவினை வேட்டுத்
தோழி தலைமகட்குக் கூறியது.]

(பத.) (எம் பெருமாட்டீ !) வளம் வயல் - பல்விதவளத்தாற் சிறந்த வயல்களாற் சூழப்பட்ட, ஊரன் - மருத நிலத்தூர்த் தலைவனாகிய தலைமகன், மருள் உரைக்கும் - மாயமொழிகளைக் கூறி மயக்கும், மாதர் - பரத்தையரது, வளைஇய - வளைந்த, சக்கரத்து ஆழி - சக்கரம் போன்ற மோதிரமணிந்த கைகளால், கொளை - கொள்ளப்படுதலினின்றும், பிழையா - தப்பி, என்று - என்றைக்காவது, இடை இட்டு - நடுவிலே தோன்றி, வருமேல் - நம்மிடத்து வருவானாயின், நின் - உன்னுடைய, வாழ் நாட்கள் - வாழுங் காலத்திலே, ஒன்றி - அவனைச் சாருவித்து, அனைத்தும் - வேண்டியவெல்லாம்,