49
 

உளேன் - பெற்றவள்போல மகிழ்வேன். (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

(விரி.) வளைஇய - சொல்லிசையளபெடை. கொளை - கொள்ளை : இடைக்குறை விகாரம். பிழையா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஆழி - தானியாகு பெயர்.

(56)

ஐந்தாவது - நெய்தல்


ஒழுகு திரைக்கரை வான்குருகின் றூவி
யுழிதரு மூதை யெடுக்குந் துறைவனைப்
பேதையா னென்றுணரு நெஞ்சு மினிதுண்மை
யூதிய மன்றோ வுயிர்க்கு.


[தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த
தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.]

(பத.) (தோழியே !) ஒழுகு - (ஏறிவந்து பாய்ந்து) இறங்கிச் செல்லும்படியான, திரை - அலைகளையுடைய, கரை - கடற்கரையினிடத்தே (வாழும்படியான), வான் - பெரிய, குருகின் - கடற் பறவைகளின், தூவி - இறகுகளினின்றும், உழிதரும் - சுழன்று வெளிபடும், ஊதை - காற்றானது, எடுக்கும் - எடுப்பாக வீசும்படியான, துறைவனை - துறைமுகத்துக்குரிய தலைவனாகிய தலைமகனை, பேதையான் - (வஞ்சகமின்றி) அறியாமை யொன்றினையே யுடையான், என்று - என, உணரும் - தெரியும்படியான, நெஞ்சும் - மனத்தையும், இனிது உண்மை - நன்றாக நாம் கொண்டிருத்தல், உயிர்க்கு - நம் வாழ்க்கைக்கு, ஊதியம் அன்றோ - நன்மையையுண்டாக்கும் நற்போக்கன்றோ ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)