கொத்துக்களாகவுள்ள, காந்தள் - காந்தள் பூவினிடத்தே, இனம் வண்டு கூட்டமாகிய வண்டுகள், இமிரும் - ஒலித்து மொய்க்கும்படியான, வரையகம் மலையிடத்தையுடைய, நாடனும் - நாட்டிற்குரியனாகிய தலைமகனும், வந்தான் - மணம் பேசி வருதலை மேற் கொண்டான், (அதனால்,) அன்னை - நம் செவிலித்தாய், அலையும் - (வரைதலை வேண்டி) வருந்துகின்ற, அலை - வருத்தமானது, இன்று - இப்பொழுதே, போயிற்று - நீங்கியது. (என்று தோழி தலைவியிடங் கூறினாள்.) (ப-ரை.) இலை பயின்ற தண்குளவிக் கொடிகள் படர்ந்து மூடிய பொதும்பின்கட் பூங்கொத்தையுடைய காந்தளில் இனவண்டுகள் ஒலிக்கும் வரையகநாடனும் வரைவொடு வந்தான்; ஆதலான், இன்று நமக்கு அன்னை யலைக்கும் அலையும் போயிற்று. (விரி.) “வேய்ந்த,” எனவும் பாடம். மற்று - அசைநிலை. வரைவு மலிதல் - மணப் பேச்சினை மேற்கொண்டுவரல். ‘இதனைத் தலைவி கூற்றாக வரைவு மலிந்தமை கண்டு மகிழ்ந்தது எனக் கூறுவாருமுளர்.’ (3) மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழ முண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந் தாமா சுரக்கு மணிமலை நாடனை யாமாப் பிரிவ திலம்.
[தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்கு தலைமகள் இயற்பட மொழிந்தது.]
(பத.) மந்தி - குரங்கானது, மன்ற - மன்றின்கண் நின்றுள்ள, பலவின் - பலாமரத்திலே, சுளை - பலாச் சுளைகள், விளை - முதிந்துள்ள, தீம்பழம் - தித்திப்பான பலாப் பழத்தை, உண்டு -தின்று, வந்து - (நீர் வேட்கையோடு) கீழிறங்கிவந்து, ஆமா - (அம்
|