50
 

(விரி.)நெஞ்சும் - உம்மை உயர்வு சிறப்புப் பொருள். அன்று, ஓ - தேற்றப் பொருள்தரு மிடைச் சொற்கள். பகற்குறிக்கண் பன்முறை வரைவு கடாவிச் சென்ற தோழி, ஒரு நாள் தம்மைச் சிறைப்புறமாக நின்று நோக்கும் தலைவனுக்கு கேட்கும்படியாகத் தலைமகளிடத்து, “தலைமகன் பெரிதும் பேதமையுடையான்,” என இயற்பழித்தனள். அதனைக் கேட்ட தலைமகள் அதற்கு மறுமொழியாகக் கூறியதாகுமிது. “தலைமகன் நம்மை ஏமாற்றும் வஞ்சகனாகாது பேதையானாயது பெரிதும் கொண்டாடற் பாலதாம்,” என்பது தலைமகனின் கருத்து. இயற்பழித்தல் - குறை கூறல். இயற்பட மொழிதல் - நிறைவு கூறல்.

(57)

என்னைகொ றோழி! அவர்கண்ணு நன்கில்லை
யன்னை முகனு மதுவாகும் - பொன்னலர்
புன்னையும் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை.

[வரையா தொழுகுந் தலைமகன் ஒருஞான்று தோழியைக்
கதுமென எதிர்ப்படத் தலைமகள் தன்னிலை
யினைத் தலைமகற்கு கூறெனத் தோழிக்குச்
சொல்லியது.]

(பத.) தோழி - தோழியே ! என்னை கொல் - யாது காரணம் ? அவர்கண்ணும் - நம்தலைமகனார் மாட்டும், நன்கு இல்லை - விரைந்து வரைதலை மேற்கொள்ளுமாறு காணப்பட்டிலது, அன்னை முகனும் - செவிலி நம்மாட்டு நடந்து கொள்ளும் மனப்போக்கும் (களவு வெளிப்பட்டமையினாலே,) அதுவாகும் - அம்முறையிற் கொடுமையினைக் கொண்டுள்ளது, பொன் அலர் - அழகிய மலர்களையுடைய, புன்னை - புன்னை மரங்கள் நிரம்பிய, சேர்ப்பனை - துறைமுகத்துக்குரிய தலைவனாகிய தலைமகனுக்கு, தக்கதோ - (இம்முறையாக வரைவு நீட்டித்தல்) பொருத்தமாகுமோ ? (பொருந்தாது, ஆதலின்,) நின் அல்லது