நின்னையல்லாமல் வேறு துணை (எனக்கு), இல் என்று - இல்லையென்று, உரை - (தலைமகனுக்குச்) சொல்வாயாக. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (விரி.) கொல் - ஐயப் பொருள்தரு மிடைச்சொல். அவர் கண்ணும் என்பதனால் தலைமகளின் பெற்றோர் மாட்டும் எனக்கொள்க. செவிலி - மனப் போக்கு - காவலிற் கடுகுதல். சேர்ப்பனை - சேர்ப்பனுக்கு : உருபுமயக்கம். கதுமென - திடீரென்று. தக்கதோ - ஓ எதிர்மறைப்பொருள். (58) இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன் கடுமான் மணியரவ மென்று - கொடுங்குழை புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய ருள்ளரவ நாணுவ ரென்று. [இரவுக்குறி வேண்டிவந்த தலைமகன் தலைமகளைக் காணாது சிறைப்புறத்தானாக, தோழி தலைமகள் அல்லகுறிப்பட்டமையினைத் தலைமகற்கு கூறியது.]
(பத.) கொடும் குழை - வளைந்த காதணிகளையுடைய தலைமகள், புள் அரவம் - பறவைகளின் ஒலிகளை, கேட்டு - அறிந்து, இடு - (அலைகளாலும் காற்றினாலும்) இடப்பட்ட, மணல் எக்கர் - மணல் மேடுகளையுடைய, அகன் கானல் - இருப்பிடமாகிய கடற்கரைச் சோலைகளையுடைய, சேர்ப்பன் - துறைமுகத்திற்குரிய தலைமகனது, கடுமான் - விரைந்து செல்லுங் குதிரையின் (கழுத்திலணியப்பெற்ற,) மணி - மணிகளின், அரவம் என்று - ஒலியென்று (நினைத்து,) சிறுகுடியர் - தன் சுற்றத்தாராகிய பரதவர்கள், உள் - தனது மனத்தினடத்தே உண்டாகுகின்ற, அரவம் - மனக்கலக்கத்திற்கு (இவ்வொலி காரணமாகுமோ என,) நாணுவர் - மதித்தறிவர், என்று - என நினைத்து, பெயர்ந்தாள் - இரவுக்குறி யிடம்வரை
|