52
 

சென்று தலைமகனாகிய நின்னைக் காணாது திரும்பினாள். (என்று தோழி தலைமகற்குக் கூறினாள்.)

(விரி.) இடுமணல் - வினைத்தொகை. மான் - னகரவொற்றுச் சாரியை. கொடுங்குழை - பண்புத்தொகையன்மொழி. சிறுகுடி - நெய்தனிலத்தூர்.

(59)

மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்ப
னணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற்
றிணிமண லெக்கர்மே லோதம் பெயரத்
துணிமுந்நீர் துஞ்சா தது.

[தலைமகள் இரவுக்குறிக்கண் தலைமகன் தன்னைச்
சார்ந்து பிரிந்தவழி உறக்கம் வாராமைகண்டு
புலம்பித் தோழி கேட்ப வுரைத்தது.]

(பத.) எம் போல் - (தலைமகனை இரவுக்குறிக்கண் சார்ந்து திரும்பிவந்து உறக்கங் கொள்ளாத) எம்மைப்போல, திணி - செறிந்த, மணல் எக்கர் - மணன்மேடுகளின், மேல் - மீது, ஓதம் - அலைகள், பெயர - மோதி நடக்கும்படி, துணி - (பெரியோர்களால்) துணிந்து வரையறுக்கப்பட்ட, முந்நீர் - மூன்று தன்மைகளையுடைய கடல், துஞ்சாதது - உறங்காமையை மேற்கொண்டது, மணிநிற நெய்தல் - நீலமணிபோன்ற நிறத்தையுடைய நெய்தற்பூக்கள் (மலர்ந்த,) இரும் கழி - பெரிய உப்பங்கழிகளையுடைய, சேர்ப்பன் - கடற்கரைத்தலைவன், அணி நலம் - தனது அழகிய நலமாகிய இன்பத்தை, உண்டு - மேற்கொண்டு, அகன்றான் - நீங்கிவிட்டான், என்று கொல் - என்று நினைத்துதானோ ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

(விரி.) கொல் - ஐயவினாப்பொருள். முத்தன்மை - படைத்தல், காத்தல், அழித்தல். இச்செய்யுளை, நச்சினார்க்கினியர் அல்ல குறிப்பட்ட தோழி இல்லுளிருந்த சிறைப்புறமாகக் கூறியதென்பர். (தொல், கள. 42)

(60)