[அறத்தொடு நின்றபின் வரைவு நீட மற்றொரு குலமகளைத் தலைமகன் வரையுங்கொலென் றையுற்ற செவிலியின் குறிப்பறிந்து தோழி அவட்குக் கூறியது.] (பத.) அடும்பு - அடப்பங்கொடிகள், இவர் - மேலேறிப் படரும்படியான, எக்கர் - மணன் மேடுகளில், அலவன் - நண்டுகள், வழங்கும் - நடமாடும்படியான, கொடும் கழி - வளைந்து செல்லும் உப்பங் கழிகள் (சூழ்ந்த,) சேர்ப்பன் - கடற்கரைத் தலைவன், அருளான் என - (வரைவு நீடுதலின்) அன்புள்ளவனாகான் என்று, தெளிந்து - அறிதலால், நல்வளை - நல்ல வளையல்களையணிந்த நந்தலைமகள், சோர - துன்புறும்படியாக, கள்ளமனத்தான் - வஞ்சகனாகி, அயல்நெறி - மற்றொரு குலமகளையடையும் வழியிலே, நடந்து - ஒழுகி, செல்லும் கொல் - தலைமகன் செல்வானோ ? (ஒருகாலுஞ் செல்லான், என்று தோழி செவிலியிடங் கூறினாள்.) (விரி.) எக்கல் - எக்கர் ; இறுதிப்போலி. கொல் - ஐயவினாப் பொருளோடு எதிர்மறைக்கண்ணது. தெளிந்து - காரணப்பொருளில் வந்த வினையெச்சம். மனத்தான் - முற்றெச்சம். (62) கண்ணுறு நெய்தல் கமழுங் கொடுங்கழித் தண்ணந் துறைவனோ தன்னில னாயிழாய் ! வண்ணகைப் பட்டதனை யாண்மை யெனக்கருதிப் பண்ணமைத் தேர்மேல் வரும். [சிறைப்புறமாக நின்ற தலைமகன் கேட்பத் தோழி தலைமகட்குக் கூறி வரைவுகடாயது.]
(பத.) ஆய் இழாய் - ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தலைவியே ! கண் உறு - கண்களின் தன்மையினைக் கொண்ட, நெய்தல் - நெய்தற் பூக்கள், கமழும் - மணக்கும்படியான, கொடும் - வளைந்து செல்லும்படியான, சுழி - கடற் கால்வாய்களையுடைய, தண் - குளிர்ந்த, அம் - அழகிய, துறைவனோ - துறை முகத்துக்குரிய தலைமகனோ, தன் இலன் - தனது பழைய போக
|