55
 

கினை மேற்கொண்டிராதவனாய், வண்ணம் - அழகினையுடைய, கைபட்டதனை - அவன் கைகளில் நாம் அகப்பட்டுக் கொண்டதனை, ஆண்மை என - தனதுஆண்மையின்பாற்பட்ட செய்தி என்று, கருதி - எண்ணிஇறுமாப்புற்று, பண் அமை - ஒழுங்காக அமைக்கப்பட்ட, தேர்மேல் - தேரின்கண்ணே அமர்ந்து, வரும் - (வரைதலை எண்ணாது) வாராநின்றனன். (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)

(விரி.) இரவுக்குறியினை வேண்டிவந்த தலைமகன் தலைமகளின் வீட்டு வேலிப்புறமாக நிற்பதைக் கண்ட தோழி தலைமகனுக்குக் கேட்கும்படியாகத் தலைமகளை நோக்கிக் கூறியதாகுமிது. ஒ - சிறப்புப் பொருள். ஆயிழை - வினைத்தொகையன்மொழி.

(63)

தெண்ணீ ரிருங்கழி வேண்டு மிரைமாந்திப்
பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணரன்றில் !
தண்ணந் துறைவற் குரையாய் மடமொழி
வண்ணந்தா வென்று தொடுத்து.

[வரைவிடைப் பொருட்பிரிவில் தலைமகன் நீட்டித்தவழித்
தோழி அன்றிலோடு கூறியது.]

(பத.) தெள் நீர் - தெளிந்த நீரினைக் கொண்ட, இரும் - பெரிய, கழி - கடற் கால்வாயிடத்திலே, வேண்டும் - விரும்பிய வளவு, இரை - மீன் முதலிய உணவுகளை, மாந்தி - உண்டு, பெண்ணைமேல் - அருகிலுள்ள பனைமரத்தின்மீதே, சேக்கும் - தங்கும்படியான, வணர்வாய் - வளைந்த வாயினையுடைய, புணர் - இணை பிரியாது, அன்றில் - அன்றிற் பறவையே ! மடமொழி - இளமையான மழலைச்சொற்களையுடைய தலைமகளின், வண்ணம் - (களவுப் புணர்ச்சியிற் கைக்கொண்ட) கன்னித் தன்மையாகிய அழகினை, தா என்று - திருப்பிக் கொடுத்துவிடுவாய் என்று, தொடுத்து - வேண்டிய மொழிகளையடுக்கி, தண் - குளிர்ந்த, அம் - அழகிய, துறைவற்கு - துறைமுகத்திற்குரிய தலைமகற்கு, உரையாய் - (சென்று) சொல்வாயாக. (என்று தோழி அன்றிற்பறவையிடம் கூறினாள்.)