56
 

(விரி.) வரைதற்கு வேண்டிப் பொருள் தேடச் சென்ற தலைமகன் கால நீட்டிக்க, தலைமகள் பொறாது வருந்த, அதனைக் கண்ட தோழி மனமுடைந்து கூறியதாகுமிது. அன்றில் - ஒருவகைப்புள். இஃது எக்காலும் இணைபிரியாது வாழுமியற்கையதாகலின், “புணரன்றில்,” எனப்பட்டது.

(64)


எறிசுறாக் குப்பை யினங்கலக்கத் தாக்கு
மெறிதிரைச் சேர்ப்பன் கொடுமை - யறியாகொல்
கானக நண்ணி யருளற் றிடக்கண்டும்
கானலுள் வாழுங் குருகு.

[தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்த
காலத்துப் பிரிவு நீட்டித்துழித் தலைமகள்
வருந்திக் கூறியது.]

(பத.) கானல் உள் - (யாங் களவுப் புணர்ச்சியிற் கண்டு கூடிய) கடற்கரைச் சோலையினிடத்தே, வாழும் - தங்கியிருக்கும், குருகு - நாரைகள், எறி - துள்ளி விளையாடும், சுறா குப்பை - சுறாமீன் தொகுதியாகிய, இனம் - கூட்டமானது, கலக்க - கலந்து சிதறும்படியாக, தாக்கும் - மோதும்படியான, எறி - வீசுகின்ற, திரை - அலைகளையுடைய, சேர்ப்பன் - கடற்கரைத் தலைமகனின், கொடுமை - (பிரியேன் என்று கூறிப் பிரிந்த) தீமையினை, கானகம் - காட்டு வழியிடத்தே, நண்ணி - பொருள் வேண்டிச் சென்று, அருள் - (என் மேலுள்ள மிகுந்த) அன்பானது, அற்றிட - இல்லாமல் காலநீட்டித்திட, கண்டும் - தெரிந்தும், அறியா கொல் - தெரிந்துகொள்ளமாட்டாவோ ? (என்று தலைமகள் தனக்குட்டானே வினவி வருந்தினாள்.)

(விரி.) தலைமகள் தான் அறிந்த தலைமகன் கொடுமையினைக் களவின் தொடக்க முதல் அருகிருந்த குருகுகளும் அறியும் என வருத்த மிகுதியாற் கூறினாள்.

(65)

நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த
பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக்