கண்ணினாற் காண வமையுங்கொ லென்றோழி ! வண்ணந்தா வென்கந் தொடுத்து. [வரைவிடைப் பொருட்பிரிவில் தலைமகன் நீட்டித்தவழித் தோழி தலைமகளோடு கூறியது.]
(பத.) என் தோழி - என்னுடைய தோழியாகிய தலைமகளே ! நுண் - நுட்பமாகிய, ஞாண் - கயிறுகளாலே பின்னப்பட்ட, வலையில் - வலையினாலே, பரதவர் - நெய்தல் நிலமக்கள், போ தந்த - பிடித்துக் கொண்டுவந்த, பல் மீன் - பலவித மீன்களாகிய, உணங்கல் - கருவாட்டினை, கவரும் - (புட்கள் சென்று) பற்றிச் செல்லுதற் கிடமாகிய, துறைவனை - கடற்றுறைமுகத்துக்குரிய தலைமகனை, கண்ணினால் - நம் கண்களால், காண - காணும்படியாக, அமையும் கொல் - நேருமோ ? (அங்ஙனங் காண நேருமாயின்,) தொடுத்து - (அவனை விடாது) பின்தொடர்ந்து, வண்ணம் - (களவுப் புணர்ச்சியிற் கைக்கொண்ட) கன்னித் தன்மையாகிய அழகினை, தா - கொடுப்பாய், என்கம் - என்று நாம் கேட்போம். (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.) (விரி.) கொல் - ஐயவினாப்பொருள். போத்தருதல் - கொணர்தல். (66) இவர்திரை நீக்கியிட் டெக்கர் மணன்மேல் கவர்கா லலவன் றனபெடை யோடு நிகரி லிருங்கழிச் சேர்ப்ப ! என் றோழி படர்பசலை யாயின்று தோள்.
[தலைமகன் தன்னையருமை செய்து தலைமகளை மறந்த காலை, தோழி அவனை எதிர்ப்பட்டுக் கூறியது.] (பத.) இவர் - கரைமேலேறி வருகின்ற, திரை - அலைகளினாலே, நீக்கி இட்ட - கடலினின்றுங் கொண்டுவந்து போடப்பட்ட, எக்கர் - மேடாகிய, மணல் மேல் - மணலிடத்தே, கவர் - இரு
|