58
 

பிரிவாக அமைந்துள்ள, கால் - கால்களையுடைய, அலவன் - ஆண் நண்டானது, தன - தன்னுடைய,பெடை - பெட்டை நண்டுகளுடனே, ஓடும் - ஓடிவிளையாடும்படியான, நிகர் இல் - ஒப்பற்ற, இரும் - பெரிய, கழி - கடற்கால்வாய்களையுடைய, சேர்ப்ப - கடற்கரைத் தலைவனே ! என் தோழி தோள் - என் தோழியாகிய தலைமகளின் தோள், (நின் பிரிவாலே,) படர் - படரப்பெற்ற, பசலையாயின்று - பசலைபூக்கப்பெற்று வருந்தாநின்றது. (நீ வந்து அப்பசலை நோயை நீக்குவாயாக, என்று தோழி தலைமகனை வேண்டிக் கொண்டாள்.)

(விரி.) நீக்கியிட்ட + எக்கர் = நீக்கியிட்டெக்கர் - அகரந்தொகுத்தல் விகாரம். “மணன்மேல் கவர்காலலவன் தன பெடையோடும்,” என்றது இறைச்சிப்பொருள். ஆயின்று - ஆயிற்று.

(67)

சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய் !
இறுமென் குரலநின் பிள்ளைகட்கே யாகி
நெறிநீ ரிருங்கழிச் சேர்ப்ப னகன்ற
நெறியறிதி மீன்றபு நீ.

[தலைமகன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த
காலத்துப் பிரிவு நீட்டித்துழித் தலைமகள் வருந்திக் கூறியது.]

(பத.) சிறுமீன் - சிறிய மீன்களே, கவுள் - அலகிடையே, கொண்ட - வைத்துள்ள, செம் தூவி - சிவந்த இறகுகளையுடைய, நாராய் - நாரையே ! இறும் - வருந்துதலையுடைய, மெல் - மெல்லிய, குரல - ஒலியினையுடைய, நின் - உன்னுடைய, பிள்ளைகட்கு ஏ - குஞ்சுகளையே, ஆகி - கருதி, மீன் தபு - மீன்களைக் கொல்கின்ற, நீ - (களவுக்காலத்திருந்து எம்மைக் கண்டு கொண்டுள்ள) நீ, நெறி நீர் - அலைந்து செல்லும் நீரினையுடைய, இரும் - பெரிய, கழி - கடற்கால்வாய்களையுடைய, சேர்ப்பன் - கடற்கரைத்தலைவன், அகன்ற - என்னைவிட்டுப் பிரிந்த, நெறி - முறையினை, அறிதி - நன்கு தெரிவாய். (ஆகலின், நீயே எனக்குற்ற