[இதுவுமது.] (பத.)என் நெஞ்சு - எனது மனமானது, சான்றவர் - நற்பண்புகள் நிறைந்த பெரியோர்களுடைய, கேண்மை - நட்பானது, சிதைவின்றாய் - கேடுதலின்றி, ஊன்றி - நிலை பெற்று, வலியாகி - (அடைந்தவர்க்கு) வன்மைமிக்க துணையாகி, பின்னும் - மேலும், பயக்கும் - பலவித நன்மைகளை யுண்டாக்கும், (அது போல,) கயம் - நீர்நிலைகளானே, திகழ் - வளத்துடன் காணப்படும், சோலை - பூஞ்சோலைகளையுடைய, மலை நாடன் - மலை நாட்டிற்குரிய தலைமகனது, கேண்மை - நட்பானது, மெலிவு இல் - குறைதலின்றி, நயம் திகழும் - இன்பமிகுந்து விளங்கும், என்னும் - என்று கருதாநின்றது. (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) அமைந்தாருடைய நட்புச் சிதைதலின்றி நிலைபெற்று அடைந்தார்க்கு வலியாகி மறுமையின்கண்ணும் பயனைச் செய்யும்; அதுபோல, நீராற்றிகழாநின்ற சோலையையுடைய மலைநாடனுடைய நட்பு மெலிவின்றி இன்பத்தைத் திகழ்விக்கும் என்னாநின்றது என்னெஞ்சு. (விரி.) கயம் - நீர், நீர்நிலை (குளம்). மெலிவு - வருத்தமுமாம். மெலிவில் நயம் - துன்பங்கலவாத இன்பம். (5)
பொன்னிணர் வேங்கை கமழு நளிசோலை நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு நின்னல தில்லையா லீயாயோ கண்ணோட்டத் தின்னுயிர் தாங்கு மருந்து. [புணர்ந்து நீங்குந் தலைமகனைக் கண்டு தோழி வரைவுகடாயது.] (பத.)பொன் - பொன் போன்ற, இணர் - பூங்கொத்துக்களையுடைய, வேங்கை - வேங்கைமரங்கள், கமழும் - மணக்கும்படியான, நளி - குளிர்ந்த, சோலை - பூஞ்சோலைகள்மிகுந்த, நல் மலை
|