நாட - நல்லமலைநாட்டிற்குரிய தலைமகனே! மறவல் - (தலைமகளை) மறவாது காப்பாயாக. வயங்கு இழைக்கு - விளங்குகின்ற அணிகலங்களை யணிந்த தலைமகளுக்கு, நின் அலது - நின்னையல்லாமல், இல்லை - (உதவும் உறவினர் எவரும்) கிடையாது, ஆல் - ஆகலின், கண் ஓட்டத்து - நின் அருட் பார்வையால், இன் உயிர் - இனிய உயிரை, தாங்கு - நிலை பெறுவிக்கும், மருந்து - மருந்து போன்ற மணவினையை, ஈயாய் - (நீ அவளுக்குக்) கொடுத்து அவளைக் காப்பாற்றுவாயாக. (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.) (ப-ரை.) பொன்போன்ற பூங்கொத்தையுடைய வேங்கை கமழாநின்ற குளிர்ந்த சோலையையுடைய நன்மலை நாடனே! மறவாதொழிவாயாக ; வயங்கிழைக்கு நின்னல்லது ஓரரணில்லையாதலால், நின்கண்ணோட்டத்தான் இன்னுயிரைத் தாங்கு மருந்து நல்காயோ? (விரி.) புணர்ந்து நீங்கும் - பாங்கியிற் கூட்டத்தாற் றலைவியைக் கூடிப் பிரியும். ஓ - இசை நிறை : வினாவுமாம். (6) காய்ந்தீய லன்னை! இவளோ தவறில ளோங்கிய செந்நீ ரிழிதருங் கான்யாற்றுட் டேங்கலந்து வந்த வருவி குடைந்தாடத் தாஞ்சிவப் புற்றன கண்.
[பகற்குறிக்கட் டலைமகன் சிறைப்புறத்தானாகப் படைத்துமொழி கிளவியாற் றோழி வரைவுகடாயது.]
(பத.) அன்னை - அன்னாய் ! ஓங்கிய - சிறப்பு மிக்க, செந்நீர் - சிவந்த நீரானது, இழிதரும் - வழிந்தோடும்படியான, கான்யாற்றுள் - (மலையூடே செல்லும்) காட்டாற்றினிடத்தே, தேம் - தேனானது, கலந்து வந்த - கலக்கப்பெற்று ஓடிய, அருவி - நீர்வீழ்ச்சியில், குடைந்து ஆட - (தலைமகள்) மூழ்கி விளையாடியபடியால், கண் - (அவளுடைய) கண்கள், சிவப்புற்றன - சிவக்கலாயின, (ஆதலால்,) இவளோ - இத்தலைமகளோ, தவறிலள் - யாதுந் தவறிய நிலையில்
|