என்று(அழைத்து), பயிரும் - அன்புடன் பழகும்படியான, ஏகல் - உயர்ச்சியோடு, சூழ். - நாற்புறமுஞ் சூழ்ந்துள்ள, வெற்பன் - மலைநாட்டுத் தலைவன், புலவும் கொல் - நம்மோடு பிணங்கி ஊடுதலைச் செய்வானோ? (என்று தோழி தலைமகளை வினவினாள். (ப-ரை.) பலாப்பழத்தினைப் பெற்ற பசுங்கண்ணினையுடைய குரங்கினுட் கடுவன், “ஏடி!” என்று தனக்கிணையாகிய மந்தியை யழைக்கும் பெற்றிய கற்கள் சூழ்ந்த வெற்பன் நம்மை யூடுங்கொல்லோ? தோழி! நங்காதலரோடு புணர்ந்த புணர்ச்சியையறிந்து புனத்துச் செல்லும் செலவினையுந் தவிர்த்தாள் அன்னையாதலால்.
(விரி.) கொல் : ஐயப்பொருள். எல - எலுவன் என்றதன் பெண்பாற் பெயர். எலுவன் - தோழன். இதனை நச்சினார்க்கினியர், (தொல். பொருள். கள. 20) காவன் மிகுதலால் மனைப்பட்டு மனங்கலங்கிய தலைமகள் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல் என்பர். அதனைத் தோழி! என்ற விளியும், மற்றைப் பொருட் போக்கும் நன்கு வலியுறுத்தும், செலவும்: உம்மை எச்சப்பொருள் கொண்டுள்ளது. (10)
குறிஞ்சி முற்றும்.
|