திணைமொழி
ஐம்பது
திணை, துறை, தொடர்விளக்க அகரவரிசை
[எண் : பாட்டெண்]
அஞ்சி அச்சுறுத்துவது
தலைமகற்கு வழிக்கண் உண்டாம்
இடையூறுகட்குப்
பயந்து, தலைமகனை இரவில் வர வேண்டா என
இடையூறுகளை எடுத்துக்காட்டித் தோழி கூறுவது
இரந்துபின்நிற்றல்
தலைமகன் தன் குறையினைக் கூறித் தோழியினைத்
தொடர்ந்து செல்லல்
இரவுக்குறி
இராக் காலத்தே தலைமகனும், தலைமகளும் எதிர்ப்பட்டுக்
கூடுமிடம். இது தலைமகளின் வீட்டினையடுத்த தோப்பின்
கண்ணதாம்
எங்கையர்
தங்கைமார்கள்; பரத்தையர்; தலைமகட்குப் பின்னர்த் தோன்றித்
தன்னைப்போல் தலைமகனோடு வாழ்தலின், அவர்களைத் தலைமகள், “எங்கையர்”
எனலாயினள்
காஞ்சி
ஒருவகை மரம்; மருதநிலக் கருப்பொருள்
குறி
தலைமகன் தன் வருகையை அறிவிக்கும்வண்ணம்செய்யும் சில
குறிப்புகள்
குறிஞ்சி
புணர்தலும், புணர்தனிமித்தமும்
செறிப்பு
வீட்டினிடங் கொண்டு சேர்த்தல்
சேட்படை
தலைமகளைத் தலைமகன் அணுகவிடாமல் தோழி
விலக்கல்.
சேண்மை + படை = சேட்படை ; சேய்மைக்கண் படுத்தல்
நெய்தல்
இரங்கலும், இரங்க னிமித்தமும்
பாலை
பிரிதலும், பிரித னிமித்தமும்
பின்நிற்றல்
தோழியைக் குறைஇரைந்து தொடர்ந்துபோதல்
முல்லை
கற்பாற்றி யிருத்தலும், அதற்குரிய நிமித்தங்களுமாம்
வரைவு கடாதல்
மணம் புரியத் தூண்டல்
வரைவுமலிதல்
மணவினையை மேற்கொண்டு தலைமகன் முதலோர்
தலைமகளின் பெற்றோர்மாட்டு மணம் பேசிவரல்
வற்புறுத்தல்
தலைமகன் வரவுக்குரிய வேதுக்களை எடுத்துக்காட்டி
வருத்தமுறா திருக்கும்படி கட்டாயப் படுத்திக்கூறல்
வாயில் நேர்தல்
தலைமகள்பால் தூதுசென்று கூட்டுவிக்க
இணங்குதல்