(பத.) பொலம் தொடி - பொன்னாற் செய்த வளையல்களையணிந்த தோழியே! மராம் - மராமரங்கள், பாங்கர் ஓங்கு - பக்கத்தே யுயர்ந்து நிற்கும்படியான, குருந்து ஓடு - குருந்த மரங்களுடனே கூடி, அரும்பு ஈன்று - மொட்டுகளை வெளிவிட்டு, மலர்ந்தன - பூத்துள்ளன, தோன்றி - (நம்முன்) எதிர்ப்பட்டு, விராய் - (நம்முடன்) விரவி, கலந்தனர் - கூடினராய், சென்றார் - (நம்மைப்பிரிந்து) சென்ற தலைவர், வலந்த - சொல்லிய, சொல் எல்லாம் - உறுதி மொழிகளையெல்லாம் (வேனிற்பருவம் வருதலால்), குயில் - குயிற்பறவைகள் (கூவி), பொய்த்த - பொய்யாக்கின (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) ஓங்கிய குருந்தோடே கூட அரும்புகளையீன்று பாங்கராகிய மராஅமரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக் கலந்து சென்ற நங்காதலர் வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின, குயில்கள் : பொலந்தொடீ!
(விரி.) மராஅம் விராஅய்: இசை நிறையளபெடைகள். பருவம் - வேனில். பொலந்தொடி : வேற்றுமைத் தொகையன்மொழி. வலத்தல் - சொல்லல். பொலந்தொடீஇ - இன்னிசை யளபெடை. (13) இதுவுமது புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாஞ் செங்கட் குயிலக வும்போழ்து கண்டும் பொருணசை யுள்ளந் துரப்பத் துறந்தார் வருநசை பார்க்குமென் னெஞ்சு. (பத.) என் நெஞ்சு - என் மனமானது, புன்னை - புன்னை மரங்கள், பொரி - பொரிபோல, மலரும் - பூக்கும்படியான, பூ - அழகிய, தண் - குளிர்ந்த, பொழில் எல்லாம் - சோலைகளிலெல்லாம், செங்கண் - சிவந்த கண்களையுடைய, குயில் - குயிற்பறவைகள், அகவும் - கூவியழைக்கும்படியான, போழ்து - வேனிற் பருவத்தினை, கண்டும் - தெரிந்தும், பொருள் நசை - பொருளின் கண் கொண்ட விருப்பினாலே, உள்ளம் - ஊக்கப்பெற்ற மனம், துரப்ப - (நம்மைவிட்டுச்) செல்லும்படி செய்ய, துறந்தார் - (நம்மை
|