முன்பு) பிரிந்து சென்றவராகிய நம் காதலர், வரும் (நம்மை நாடி) வருகின்ற; நசை - காதலோடு கூடிய ஒழுக்கத்தை, பார்க்கும் - எதிர்பாராநின்றது (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) புன்குகள் பொரிபோல மலரப் பூந்தண் பொழில்களெல்லாஞ் செங்கட் குயில்கள் கூவுகின்ற போழ்துகண்டும், முன்பு பொருணசையையுடைய ஊக்கந்துரப்ப நம்மை நீங்கினர் வருநசையைப் பாராநின்றது என் நெஞ்சு.
(விரி.) தலைமகன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற வேனிற் பருவம் வந்தும் அவன் வாராமை கண்டு தலைமகள் நெஞ்சம், அவன்பால் வெறுப்புக் கொள்ளாது, அவன் வருவதையினையே மேலும் எதிர்பாராநின்றது என்பது கருத்து. (14) ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பது படச் சொல்லியது சிறபுன் புறவொடு சிற்றெழால் சீறு நெறியரு நீள்சுரத் தல்குவர்கொ றோழீ! முறியெழின் மேனி பசப்ப வருளொழிந் தார்பொருள் வேட்கை யவர். (பத.) தோழீ - தோழியே! முறி - இளந்தளிரினது, எழில் - அழகினைக் (கொண்ட,) மேனி - (என்) வண்ணம், பசப்ப - பசலையுறும்படி, அருள் - (நம் மேலுள்ள) மிக்க அன்பினை, ஒழிந்து - நீங்கப்பெற்று, ஆர் - (பல்விதப்பயன்களும்) நிறைந்த, பொருள் - செல்வத்தின்கண்ணே, வேட்கையவர் - விருப்பமிக்க நங்காதலர், சிறு - சிறிய, புன் புறவு ஒடு - புல்லிய புறாக்களினோடு, சிறு எழால் - சிறிய எழால் (என்னும் ஒருவகைப் பறவை), சீறும் - சினந்து போர் புரியும் நெறி அரு - வழி காணுதற்கரிய, நீள் - பெரிய, சுரத்து - பாலைநிலத்தின்கண்ணே, அல்குவர் கொல் - தங்கி நம்மை மறப்பாரோ? (மறக்காது விரைந்து நமக்கு அருளுவர்; ஆகலின், யான் ஆற்றுவல் என்று, தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
|