16
 

ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவ
லென்பது படச் சொல்லியது

கல்லதர் வாயிற் கடுந்துடி கள்பம்பும்
வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொ
லெல்வளை மென்றோ ணெகிழப் பொருணசைஇ
நல்கா துறந்த நமர்.

(பத.) எல் - இலங்கும்படியான, வளை - வளையல்களையணிந்த, மெல் தோள் - மெல்லிய நந்தோள்கள், நெகிழ - மெலியும்படி. பொருள் - செல்வத்தினை, நசைஇ - விரும்பி, நல்கா - (நமக்கு) நன்மையினைச் செய்யாது, துறந்த - பிரிந்த, நமர் - நங்காதலர், கல் - கற்களையுடைய, அதர் - வழிகளினருகேயுள்ள, வாயில் - (பாலை நிலத்தார்களின்) வாயில்கடோறும், கடும் துடிகள் - அச்சத்தை யுண்டாக்கும் உடுக்கைகள், பம்பும் - ஒலிக்கும் படியான, வில் - விற்போரினாலே, உழுது - முயன்று, வாழ்நர் - வாழ்க்கையை நடத்தும் மறவர்களின், குறம்பு உள் உம் - ஊர்களினிடையேயும், போவர் கொல் - செல்வாரோ? (செல்லாது மீள்வர் என்று, தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) கல்லையுடைய வழிமருங்கிலுள்ள குறும்புகளின் வாயிறோறும் அச்சத்தைச் செய்யந் துடிகள் நின்று இயம்பும் வில்லுழுது வாழ்வார் குறும்பின்கண்ணுஞ் செல்வர் கொல்லோ? இலங்கும் வளை மென்றோள் மெலியும்படி பொருட்காதலால் நம்மை நல்காது நீங்கிய நமர்.

(விரி.) கொல் : ஐயப்பொருள் தருமிடைச்சொல் : நசைஇ : சொல்லிசை யளபெடை. நல்கா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். காதலர் செல்லாது மீள்வதான் தலைமகள் ஆற்றுவாளாயினள் என்பது கருத்தாம். கவலுதல் - வருந்துதல். ஆற்றுவல் : தன்மையொருமை வினைமுற்று.

(17)

செலவுக் குறிப்பறிந்த தலைமகள் உடன்படாது சொல்லியது

கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தஞ் சொரியும்
வெதிர்பிணங்குஞ் சோலை வியன்கானஞ் செல்வார்க்