18
 

ளுடனே, சோர்கின்றஅழிகின்றன, என் தோள் - என்னுடைய தோள்கள், வளை ஒடு - வளையல்களுடனே, சோரும் - வாடாநின்றன, (அங்ஙனமிருக்க,) கலை ஒடு - ஆண்மான்களோடு, மான் - பெண்மான்கள், இரங்கும் - நீரின்மையாற் றுன்புற்று வருந்தா நிற்கும், கல் அதர் - கற்கள் நிரம்பிய வழிகளின், நிலை - தன்மையினை (நங்காதலர் கண்டு), அஞ்சி - அச்சமுற்று, நீள்சுரத்து - அப்பெரிய பாலைநிலத்தின்கண்ணே, அல்குவர் கொல் - தங்குவாரோ, (தங்குதலின்றி விரைந்து மீள்வர், என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) கலையொடு மான்கள் துன்புற் றிரங்காநிற்கும் மலைவழிகளையுடைய கடறுகளின் இப்பெற்றிப் பட்டுள்ள நிலையஞ்சிச் சுரத்தின்கட் டங்குவர் கொல்லோ? தோழி! முலையோடு சோர்கின்றன போன்ற வண்ணங்கள்; அந்தோ! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற என்றோள்கள்.

(விரி.) கொல் : ஐயப்பொருள் தரு மிடைச்சொல். கல் - மலை யெனலுமாம். தலைவர் விரைந்து மீள்வாராகலின், ஆற்றுவலென்பது தலைமகள் கருத்து. பழையவுரையில், ‘உள்ள,’ என்ற மொழி ஏட்டுப்பிரதியின் சிதைவால் மறையப் பின்னர்க் கொண்டதாம்.

(19)

மகட் போக்கிய நற்றாய் சொல்லியது

ஏற்றிய வில்லி னெயினர் கடுஞ்சுரம்
பாற்றினஞ் சேரப் படுநிழற் கண்டஞ்சிக்
கூற்றன வல்வில் விடலையோ டென்மக
ளாற்றுங்கொ லைய நடந்து.

(பத.) என்மகள் - (தலைமகனுடன் போய தலைமகளாகிய) என்னுடைய மகள், ஏற்றிய - (நாண்பூட்டி அம்பினைப் பொருத்தி) வளைத்த, வில்லின் - விற்களையுடைய, எயினர் - வேட்டுவர் (வாழும்.), கடும் சுரம் - கொடிய பாலைவனத்தின்கண்ணே, பாற்று இனம் - பருந்துக் கூட்டம், சேர - ஒருங்கு கூடிப் பறக்க, படுநிழல் - அதனாலுண்டாகின்ற நிழலினை, கண்டு - பார்த்து அஞ்கி - (யாதோ என) அச்ச முறுதலால், கூற்று அன - கூற்றுவனையொத்த வல் வில் - வலிய வில்லுடைய, விடலை ஓடு - காளையாகிய