19
 

தலைமகனுடனே ஐய நடந்து - மெதுவாக நடந்து (சென்று), ஆற்றும் கொல் - பொறுக்க மாட்டுவளோ? (என்று நற்றாய் வினவிப் புலம்பினாள்.)

(ப-ரை) நாணேற்றிய வில்வினையுடைய வேடர் வாழும் கடுஞ்சுரத்தின்கட் பாற்றினஞ் சேரப்படுகின்ற நிழலைக் கண்டஞ்சி, என்மகள் கூற்றன்ன வல்வில்லையுடைய விடலையுடனே சென்றாற்ற வல்லள்கொல்லோ மெல்லிதாக நடந்து.

(விரி.) அஞ்சி : காரணப்பொருளின்கண் வந்த வினையெச்சம். கொல் : ஐயப்பொருள் தரு மிடைச்சொல். விடலை - பாலைநிலத் தலைவன். நற்றாய் - பெற்றதாய்.

(20)
பாலை முற்றும்.