3. முல்லை
தலைமகன் வரைவுமலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது அஞ்சனக் காயா மலரக் குருகிலை யொண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத் தண்கமழ் கோட றுடுப்பீனக் காதலர் வந்தார் திகழ்கநின் றோள். (பத.) காயா - காசாஞ்செடிகள், அஞ்சனம் - மையினைப் போன்று, மலர - பூக்கவும், குருகு - குருக்கத்திச் செடிகளின், இலை - இலைகள், ஒள் தொடி - ஒளியினையுடைய வளையல்களை (யணிந்த), நல்லார் பெண்மணிகளின், முறுவல் - பற்களைப் போன்று, கவின் கொள - அழகுடன் கூடிக் காணப்பெறவும், தண் - குளிர்ந்த, கமழ் - மணமிக்க, கோடல் - வெண்காந்தட் செடிகள், துடுப்பு - துடுப்பினைப் போன்று, ஈன - (மலர்க்குலைகளை) வெளிவிடவும், காதலர் - (வரைவிடை வைத்துப் பிரிந்த) நந் தலைமகனார், வந்தார் - (முலைவிலைக்குரிய பொருளொடு) வந்து விட்டார், நின் - உன்னுடைய, தோள் - (பிரிவான் மெலிந்த) தோள்கள், திகழ்க - (முன்போற் பூரித்து) விளங்குவனவாக. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
(ப-ரை.) அஞ்சனம் போலக் காயாக்கள் மலர, குருகிலைகள் ஒண்டொடியுடைய நல்லார் முறுவல்போல அழகு கொள்ள, குளிர்ந்த கோடல்கள் துடுப்புப்போலப் பூங்குலையை யீனாநிற்ப, நங்காதலர் வந்தார்; நின்னுடைய தோள்கள் விளங்குவனவாக.
(விரி.) முல்லையாவது கற்பாற்றியிருத்தலும் அதற்குரிய நிமித்தங்களுமாம். குருகு - குருக்கத்தி; மாதவி. மாதவி யிலைகள் பெண்களின் பற்கள் போன்று உருவமைப்பிற் பொருந்தியுள்ளமை ஈண்டுக் கொள்ளப்பட்டுள்ளது போலும். காந்தளின் மலராத அரும்புகள் உருவமைப்பில் துடுப்பினை யொத்துக் காணுமாறு கண்டு தெளிக. துடுப்பு - ஒரு வகைத் துழாவுகருவி; கூழ் முதலியன அடுங்காலத்துக் கையாளப்பெறுவது. திகழ்க: வியங்கோள் வினைமுற்று. வரைவுமலிதல் - மணவினையை மேற்கொண்டு
|