22
 


இதுவுமது

சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிஃதோ
வெஞ்சின வேந்தர் முரசினிடித்துரறித்
தண்கட னீத்தம் பருகித் தலைசிறந்
தின்றையி னாளை மிகும்.

(பத.) செறி - வரிசையாக நிறைக்கப்பெற்ற, தொடீ - வளையல்களை யணிந்த மங்கையர்க்கரசி! இஃதோ - இதோ பார், கார் - முகிலானது, வெம் சினம் - கொடிய சினத்தையுடைய, வேந்தர் - (போர்க்குப் புறப்பட்ட) பேரரசரின், முரசின் - முரசவாத்தியத்தினைப் போன்று, இடித்து - இடியோடுகூடி, உரறி - முழங்கி, தண் - குளிர்ந்த, கடல் - கடலினது, நீத்தம் - வெள்ளத்தை, பருகி - குடித்து, தலைசிறந்து - மேலும் மேலும் சிறப்புற்று, மிகும் - பெருகா நின்றது, (ஆகலின்), சென்றார் - (பொருள்வேண்டி நம்மைப் பிரிந்து) சென்ற தலைமகனார், இன்றையில் - இற்றை நாளிலாவது, நாளை - நாளைக்காவது, வருவர் - வந்து சேர்வர். (ஆதலின் நின் மயலை யொழிப்பாயக, என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

(ப-ரை.) நம்மைப் பிரிந்து போயினார் வருவர்; செறிதொடீஇ! இக்காலம் கார் காலமாயிருந்தது; வெஞ்சின வேந்தர் முரசுபோ விடித்து முழங்கித் தண்கடல் வெள்ளத்தைப் பருகி மேன்மேற் சிறந்து இன்றையின் நாளை மிகுங்காண்.

(விரி.) செறி தொடீஇ : இன்னிசையளபெடை நீத்தம் - நீந்துதற்குரிய நீர்நிலை; வெள்ளம் - பெருக்கு.

(23)

இதுவுமது

செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீரிஃதோ
வஞ்சினஞ் சொல்லி வலித்தார் வருகுறியால்
வெஞ்சினம் பொங்கி யிடித்துரறிக் கார்வானந்
தண்பெயல் கான்ற புறவு.

(பத.) செம் சுணங்கின் - செவ்விய தேமலையுடைய, மெல்முலையாய் - மெல்லிய முலைகளையுடைய தலைவியே! கார்வானம் -