முகிலோடு இவ்விண்வெளி, வெம் சினம் - கொடிய சினத்தினாலே, பொங்கி - (பொங்கியது என்று சொல்லும்படி) நாற்புறமும் மிகுந்து நிறைந்து, இடி - இடியோடு கூடி, உரறி - முழங்கி, தண் - குளிர்ந்த, பெயல் - மழையினை, புறவு - முல்லை நிலத்தின்கண்ணே, கான்ற - பெய்தன. இஃதோ - இக்கார் காலம், வஞ்சினம் - (நம்மிடத்துப் பல வகையான) உறுதிமொழிகளை, சொல்லி - (பிரியுங்காலத்துக்) கூறி, வலித்தார் - (நம்மைக் கற்பாற்றியிருக்கும்படி) வற்புறுத்திச் சென்ற தலைமகனார், வரு குறி - வருகின்ற அடையாளமாகும். ஆல் - ஆகலின், சேர் - (பிரிவினாலே) உண்டாகிய, பசலை - பசப்பு நிறத்தினின்றும், தீர் - நீங்கி மகிழ்வாயாக (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்). (ப-ரை.) செஞ்சுணங்கினையுடைய மெல்லிய முலையாய்! நின்னைச் சேர்ந்த பசலை நீங்குவதாக; சூளுறவாகிய சொற்களைச் சொல்லி நம்மை வற்புறுத்தினார் தாம் வருதற்குச் சொல்லிய குறியால். வெஞ்சினத்தாற் பொங்கியது போல இடித்து முழங்கிக் கறுத்த முகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே யுகுத்தனவாதலால், காரிது.
(விரி.) வானம் : பால்பகா அஃறிணைப் பெயர். தலைமகனார் திரும்புவதாகக் கூறிய கார் காலம் வந்தமையின், அவர் திரும்புவது ஒருதலை என்பது தோழி கருத்து. புறவு - மருத நிலத்தின் புறத்தே அடுத்திருப்பது ; முல்லை. (24) இதுவுமது கருவியல் கார்மழை கால்கலந் தேந்த உருகு மடமான் பிணையோ டுகளும் உருவ முலையாய்! நங் காதல ரின்னே வருவர் வலிக்கும் பொழுது. (பத.) உருவம் - அழகிய, முலையாய் - முலைகளையுடைய தலைவியே! கரு - நீராகிய கருவினோடு, இயல் - புறப்பட்டுவந்த, கார் மழை - கரிய மழையானது, கால் கலந்து - காற்றோடுகூடி, ஏந்த - (விண்வெளியிலே) உயர்ந்து காணப்பெறுதலால், உருகும் - (முன்பு மழையின்மையின் வெம்மையாலே) புழுக்கத்தினை
|