24
 

யுற்றிருந்த, மடமான் - இளமையான ஆண் மான்கள், பிணையோடு - தம் பெட்டைமான்களோடு, உகளும் - துள்ளி விளையாடா நின்றன, (ஆகலின்), இன்னே - இப்பொழுதே, நம் காதலர் - நம் தலைமகனார், வருவர் - (நம்பால்) வந்து சேர்வர், பொழுது - இக்கார்காலமே, வலிக்கும் - (அவர் வரவினை நமக்கு) வற்புறுத்தித் தெரிவிக்கா நின்றது (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்).

(ப-ரை.) கருவியன்ற கரியமழை காற்றோடு கலந்துயர்தலால், முன் வெம்மையால் உருகும் மடமான்கள் தம் பிணையோடு உகளாநின்றன; நிறத்தையுடைய முலையாய்! நங்காதலர் இப்பொழுதே வருவார்; இக்காலம் நம்மைத் தோற்றுவியாநின்றது.

(விரி.) முன்பு - கார்காலத்திற்கு முன்னதாகிய முதுவேனிலின்கண். பிரியுங்காலத்துத் தலைமகனார் திரும்புவதாகக் கூறிய கார்காலத்தோற்றம் அப்பொழுது நன்கு காணப்பெறுவதால், “பொழுது வலிக்கும்,” என்று சொல்லப்பட்டது.

(25)

இதுவுமது

இருங்கடன் மாந்திய வேர்கொ ளெழிலி
கருங்கொடி முல்லை கவின முழங்கிப்
பெரும்பெய றாழப் பெயர்குறி செய்தார்
பொருந்த நமக்குரைத்த போழ்து.

(பத.) (தலைவியே! நங்காதலர்), இரும் கடல் - பெரிய கடலினை, மாந்திய - பருகிய, ஏர் கொள் - அழகினைக் கொண்ட, எழிலி - முகில்கள், கரும் கொடி - கரிய கொடிகளையுடைய, முல்லை - முல்லைச் செடிகள், கவின - மொட்டுக்களோடு அழகுற்றுக்காணும் வண்ணம், முழங்கி - ஒலித்துக்கொண்டு, பெரும் பெயல் - பெருமழையினை, தாழ - பெய்யும்படியாக, பெயர் - (தாம் திரும்பி) வருவதற்குரிய, குறி - அடையாளத்தினை, செய்தார் - செய்து காட்டியுள்ளார், (மேலும்,) (நமக்கு - பிரிவால் வாடிய) நம்மனத்தே, பொருந்த - பதியும்படியாக, உரைத்த - திரும்புவதாகச் செப்பிச் சென்ற, போழ்து - காலமு மிதுவே (ஆகலின், மயக்கினை யொழிப்பாயாக, என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)