27
 

இதுவுமது

கோடலங் கூர்முகை கோளரா நேர்கருதக்
காடெலாங் கார்செய்து முல்லை யரும்பீன
வாறெலா நுண்ணறல் வார வணியிழாய்!
போதராய் காண்பாம் புறவு.

(பத.) அணி இழாய் - அழகிய அணிகலன்களைப் பூண்டுள்ள அம்மையே! காடு எலாம் - முல்லை நிலங்களின் எல்லாப் பாகங்களிலும், கார் செய்து - முகில்கள் முழங்கிப் பெய்தலான், கோடல் - காந்தளினது, அம் - அழகிய, கூர்முகை - கூர்த்த மொட்டுக்கள், கோள் - வலிமை மிக்க, அரா - பாம்பினுக்கு, நேர் - ஒப்பாக, கருத - எண்ணும்படி (அரும்பவும்), முல்லை - முல்லைச் செடிகள், அரும்பு - மொட்டுக்களை, ஈன - தோற்றுவிக்கவும், ஆறு எலாம் - (நடக்கும்) வழிகளிளெல்லாம், (மழை நீரோட்டத்தால்), நுண் - நுண்ணிய, அறல் - கருமணல், வார - வழிந்துகிடக்கவும், (அமைந்த), புறவு - முல்லை நிலக் காட்சியை, காண்பாம் - நாம் கண்டு களிப்பம், போதராய் - (வெளியே) புறப்பட்டுவருவாயாக (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்).

(ப-ரை.) காந்தளின் மிக்க அரும்புகள் கோளராவிற்கு மாறாகக் கருதிக் காடெல்லாங் கார்ப்பருவத்தைச் செய்து முல்லையரும்புகளை யீன, வழிகளெல்லாம் நுண்ணிய அறல் மணல் மேலொழுகுதலால், அணியிழையை யுடையாய்! புறவினைக் காண்பாம் போதராய்.

(விரி.) செய்து: காணப் பொருளில் வந்த வினையெச்சம். காண்பாம்: முன்னிலையுளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்று. இங்கு, தோழி தலைமகட்குக் கார்காலக்காட்சியைக் காணுமாறு அழைத்து வற்புறுத்துமாறு காண்க. இதன் பயன் யாதெனின், அக்காட்சியின்கண் ஈடுபாட்டால் தலைமகன் பிரிவைச் சிறிது மறந்து தலைமகள் மகிழும் என்பதாம்.

(29)

இதுவுமது

அருவி யதிரக் குருகிலை பூப்பத்
தெரியா வினநிறை தீம்பால் பிலிற்ற