28
 

வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்ததிக் கார்.

(பத.) வரி - (அழகிய) கோடுகள் (நிறைந்த), வளை - வளையல்களை (யணிந்த), தோள் - தோள்களையுடைய தலைவியே! இகார் - இம்முகிலானது, அருவி - நீர்வீழ்ச்சிகள், அதிர - (பெருக்கெடுத்து வந்து) முழங்கவும், குருகிலை - குருக்கத்திச் செடியின் இலைகள், பூப்ப - பொலிவுடன் விளங்கவும், தெரி - (சுரத்தலின் நன்மை) ஆராய்ந்து அறியப்பட்ட, ஆ இனம் - பசுக் கூட்டங்கள், நிறை - குறைவின்றி, தீம்பால் - இனிய பாலை, பிலிற்ற - பொழியவும், பெரிய - மிகுதியும், மலர்ந்தது - பரந்து பெய்யாநின்றது, (ஆதலான்), நமர் - நம்மவராகிய காதலர், வருவார்கொல் - (இப்பொழுது நம்மாட்டு) வந்து சேருவார் போலும் (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

(ப-ரை.) மலையருவிகள் வந்து முழங்க, குருகிலைகள் பூப்ப, தெரிந்த ஆனினங்கள் இனிய பாலைப்பொழிய, வரிவளைத் தோளினையுடையாய்! நமர் வருவார் கொல்லோ? பெரியவாயுள்ள அழகுகளை மலர்ந்தது இக்கார் ஆதலான்.

(விரி.) தோளி: அண்மை விளி கொண்டுள்ளது. கொல் : ஐயப்பொருள் கொண்டுள்ளது. இங்கு, கார்ப்பருவத்தினைத் தலைமகட்குத் தெரிவித்த தோழி, தலைமகனார் வருதல் கூடும் எனக் கூறலாயினள். காட்டிய : இறந்தகாலப் பெயரெச்சம்.

(30)

முல்லை முற்றும்.