30
 

இதுவுமது

கணைக்கா னெடுமருது கான்ற நறுந்தா
திணைக்கால நீலத் திதழ்மேற் சொரியும்
பணைத்தாட் கதிர்ச்செந்நெற் பாய்வய லூர
னிணைத்தா னெமக்குமோர் நோய்.

(பத.) கணை - திரண்ட, கால் - அடிப்பாகத்தினையுடைய, நெடு மருது - நீண்டுவளர்ந்த மருத மரங்கள், கான்ற - வெளியிட்ட, நறும் தாது - மணமிக்க பூந்துகளை, பணை - பருத்த, தாள் - தூறுகளையுடைய, கதிர் - கதிர்களோடு கூடிய, செந்நெல் - செவ்விய நெற்பயிரிடத்தே (சொரியாமல்), இணை - ஒத்த, கால - அடிப்பாகங்களையுடைய, நீலத்து இதழ் மேல் - நீலோற்பல மலரிதழ்களின் மீதே, சொரியும் - சொரிந்து கொண்டிருக்கும்படியான, பாய் - பரந்த, வயலூரன் - மருத நிலத்தூர்த் தலைவன், எமக்கும் - (பரத்தையர்க்கின்பம் பாலித்தலே யன்றி, அவனால் வெறுக்கப்பட்ட) எமக்கும், ஓர் - இணையில்லாத, நோய் - (பசலை) நோயினை, இணைத்தான் - பொருந்தும்படி செய்து போற்றினான். (ஆகலின், அவனருள் இப்பொழுது எமக்கு வேண்டா வொன்றே யாகும். என்று தலைமகள் தலைமகனின் வாயிலாக வந்தனிடம் கூறினாள்.)

(ப-ரை.) திரண்ட காலையுடைய மருதுகள் உகுத்த நறுந் தாதுகள் ஒத்த தாளினையுடைய நீலங்களின் இதழ் மேலே சொரியும் பெருந்தாட் கதிரையுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையர்க் கின்பத்தை இணைத்தலே யன்றி, எமக்குமோர் பசலை நோயினை யிணைத்தான்.

(விரி.) “மருது கான்ற நறுந்தாது, செந்நெல்லிற் சொரிதலின்றி, நீலத்திதழ்மேற் சொரியும்” என்றது இறைச்சிப்பொருள். மருதினைத் தலைமகனாகவும், செந்நெல்லினைத் தலைமகளாகவும், நீலத்தினைப் பரத்தையாகவும், சொரிதலினை யருளுதலாகவுங் கொள்க. அருளுதல் - இன்பமளித்தல்.

(32)

தோழி வாயின் மறுத்தது

கடையாயார் நட்பேபோற் காஞ்சிநல் லூர!
உடைய விளநல முண்டாய் - கடைய