32
 

(பத.) பாண - பாணனே! செந்நெல் - செவ்விய நெல்லானது, விளை - விளையும்படியான, வயல் ஊரன் - கழனிகள் சூழப் பெற்ற மருத நிலத்தூர்த் தலைவன், சில பகல் - (முன்பு) சிலகாலம், தன் நலம் - தன்னாலாகிய இன்பத்தை, என் அலார்க்கு - என்னையல்லாத மற்றைய பெண்களுக்கு, ஈயான் - கொடாதவனாய் நிறை கொண்டிருந்தனன், (இப்பொழுது,) பாரித்த - பரந்த, அல்குல் - நிதம்பத்தினையும், பணை - பருத்த, தோளார் - தோள்களையுமுடைய பரத்தையரது, சேரியுள் - சேரியினிடத்தே, வாரிக்கு - (தன்னலமாகிய இன்பவாரியினைத் தலைமகன்) வாரி இறைத்தற் குரிய (காரணத்தினை), புக்கு - (அச்சேரிக்குப்) போய், நின்று - (ஒருபுறமாக) நின்றிருந்து, ஆய் - ஆராய்வாயாக, (ஆகலின்), எழு - (இவ்விடத்தை விட்டுப்) புறப்படுவாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

(ப-ரை.) செந்நெல் விளைகின்ற வயலினையுடைய ஊரன் முன்பு சில நாள் தன்னலத்தை யா னல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த அல்குற் பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின்கண் மற்றவர் தலைமகற்கே நல்கும் வாரிக்குப் புக்கு நின்று ஆராய்வாயாக: ஆகையால், பாண! இங்குநின்றும் ஏழுவாயாக.

(விரி.) வாரி - பெருக்கு; வெள்ளம். பாணன் - தலைமகனுக்கும் தலைமகளுக்கும் யாழிசையுடன் பாட்டுப்பாடி அவர்களை மகிழ்விக்கும் ஏவலன்.

(34)

இதுவு மது

வேனிற் பருவத் தெதிர்மலரேற் றூதுங்
கூனிவண் டன்ன குளிர்வய னல்லூரன்
மாணிழை நல்லா ரிளநல முண்டவர்
மேனி யொழிய விடும்.

(பத.) வேனில் பருவத்து - வேனிற் காலத்தே, எதிர் - எதிரிலே அகப்பட்ட, மலர் - பூக்களை, ஏற்று - (விரும்பி) மேற்கொண்டு, ஊதும் - தேனினைக் கைக்கொள்ளும், கூனி - (வளைந்த சிறகாகிய) கூனினையுடைய, வண்டு அன்ன - வண்டினை யொத்து