33
 

வாழ்க்கையை நடத்தும், குளிர் - குளிர்ந்த, வயல் நல் ஊரன் - கழனிகள் சூழ்ந்த நல்ல மருதநிலத்தூர்த் தலைவன், மாண் - மாட்சிமையுற்ற, இழை - அணிகலங்களை யணிந்த, நல்லார் - பெண்மக்களிடத்தேயுள்ள, இள நலம் - இளமையாலுண்டாம் நன்மையாகிய இன்பத்தினை, உண்டு - கைக்கொண்டு, அவர் - அப்பெண்மக்களது, மேனி - அழகு, ஒழிய - நீங்கியவுடன், விடும் - விட்டு நீங்குவன். (அங்ஙனமுள்ள தலைமகன் உறவு எமக்கு வேண்டுவதின்று, என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

(ப-ரை) வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை ஏற்றுக் கொண்டூதும் கூனிவண்டு போலுங் குளிர்வயல் நல்லூரன்; ஆகலான், மாட்சிமைப்பட்ட இழையையுடைய நல்லாரின் நலத்தை நுகர்ந்து மற்றவர் உடம்பினை ஒழிய விடும்.

(விரி.) வேனிற் காலத்தே மலர்கள் மலரும் அருமைகண்டு வண்டுகள் கிடைத்தபூக்களிலுள்ள தேனைச் சேர்க்க முயல்வது பற்றி, “வேனிற் பருவத் தெதிர்மல ரேற்றூதுங் கூனிவண்டு,” எனலாயினர். மேனி உடம்பு எனலு மாம்.

(35)

தோழி வாயில் நேர்வாள் கூறியது

செந்தா மரைமலருஞ் செய்வய னல்லூர!
நொந்தான்மற் றுன்னைச் செயப்படுவ தென்னுண்டாந்
தந்தாயு நீயே தரவந்த நன்னலங்
கொண்டாயு நீயாயக் கால்.

(பத.) செந்தாமரை - செவ்விய தாமரைப்பூக்கள், மலரும் - பூத்துக்கிடக்கும்படியான, செய் - பண்படுத்தப்பட்ட, வயல் - கழனிகள் (சூழ்ந்த), நல் ஊர - நல்ல மருதநிலத்தூர்த் தலைவனே! உன்னை - (பரத்தையிற் பிரிந்த) நின்னை, நொந்தால் - வருத்தமுற்றுச் சினத்தலால், செயப்படுவது - (பெண்பாலராகிய எங்களால் செய்யக்கிடந்தது,) என் உண்டாம் - என உள்ளதாம் (ஒன்றுமின்று;) (மேலும்), தந்தாயும் - (களவுக்காலத்துத் தலைமகட்குப் புணர்ச்சி யின்பத்தால் பேரழகினைத்) தந்தவனும், நீயே - நீயே ஆவாய், தர - நீ கொடுக்க, வந்த - (தலைமகட்குக்) கிடைத்த, நல் நலம் - நல அழகினை, கொண்டாயும் - (பிரிவால் எடுத்துக்)