கொண்டவனும், நீ ஆயக்கால் - நீயே ஆயினால், (நின்பால் யாம் எவ்வகைக் குறை கூறக்கூடும்? யாதுங்கூடாது, என்று தலைமகனிடந் தோழி கூறினாள்.) (ப-ரை.) செந்தாமரைகள் மலராநின்ற செய்யப்பட்ட வயல்களையுடைய நல்லூர! நீ செய்த பிழைகட்கு நொந்தால் நின்னைச் செய்யப்படுவ தென்னுள்ளதாம்? என்றோழி நலத்தைத் தந்தாயு நீயே; தரவந்த நன்னலத்தைக் கொண்டாயும் நீயேயாயினால். (விரி.) மற்று: அசைநிலை. “கொடுத்தவன் எடுத்தாற் கூறுவதென்?” என்ற கொள்கைப்படி பொருள் விரிக்கப்பட்டது. வாயில் நேர்தல் - தலைமகள்பால் தூதுசென்று கூட்டுவிக்க இணங்குதல். நேர்வாள் : முற்றெச்சம். (36) பாணற்குத் தலைமகள் வாயின் மறுத்தது பல்காலும் வந்து பயின்றுரையல் பாண!கே ணெல்சேர் வளவய லூரன் புணர்ந்தநா ளெல்வளைய மென்றோளே மெங்கையர் தம்போல நல்லவரு ணாட்டமி லேம். (பத.) பாண - பாணனே! கேள் - (நான் சொல்வதைக்) கேட்பாயாக, நெல் சேர் - நெற்பயிர்கள் நிறைந்திருக்கும்படியான, வளம் - வளத்தினையுடைய, வயல் - கழனிகள் (சூழ்ந்த), ஊரன் - மருதநிலத்தலைவன், புணர்ந்த நாள் - (எம்மோடு) கலந்து வாழ்ந்த அக்காலத்திலும், எல் வளையம் - ஒளியினையுடைய வளையல்களை யணிந்துள்ள யாங்கள், (அவனுக்கு) மெல் தோளேம் - எளிமையான தோள்களையுடையவர்களாய் இருந்தோமேயன்றி, எங்கையர் - எமக்குப் பின் வந்தவர்களாகிய பரத்தையரை, போல - போன்று, நல்ல - சிறந்த (அருள் மிகுந்த அன்போடு கூடிய), நாட்டம் - (தலைமகனின்) பார்வையினை, இலேம் - பெற்றேமில்லை, (அங்ஙனமிருக்க,) பல் காலும் - பல தடவைகளிலும், வந்து - இங்குத் தோன்றி, பயின்று - (தலைமகனின் பேரன்பினை) எடுத்து, உரையல் - (வீணே) சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)
|