(ப-ரை.) பல பொழுதும் வந்து பயின்று சொல்லற்க; பாணனே! கேட்பாயாக; நெற் செறிந்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னாளின்கண்ணும் எல்வளையம் மென்றோளேம்; எங்கையர் தம்மைப்போல நல்ல மடந்தையருள் வைத்து அவனாலெண்ணப்பட்டிலேம் (விரி.) உரையல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. எங்கையார் - தங்கைமார்கள்; பரத்தையார், தலைமகட்குப் பின்னர்த் தோன்றித் தன்னைப்போல் தலைமகனோடு வாழ்தலின், அவர்களைத் தலைமகள், ‘எங்கையர்,’ எனலாயினள். தாம் : அசைநிலை. (37) இதுவு மது நல்வய லூர னலமுரைத்து நி பாண! சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா வொழிதிநீ யெல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த விருங்கூந்தல் சொல்லுமவர் வண்ணஞ் சோர்வு. (பத.) பாண - பாணனே! நல் வயல் - நல்ல கழனிகள் (சூழ்ந்த) ஊரன் - மருதநிலத்தூர்த் தலைவனின், நலம் - நன்மைகளையெல்லாம், நீ சொல்லில் - நீ உன்னுடைய வெறுஞ் சொற்களினாலே, பயின்று - எடுத்து, உரைக்கவேண்டா - சொல்ல வேண்டுவதின்று; எல்லும் - வெள்ளிய நிறமிக்க, நல் முல்லைதார் - நல்ல முல்லை மாலைகள், சேர்ந்த - நிறைந்த, இரும் கூந்தல் - நீண்ட கூந்தலையுடைய பரத்தையே, அவர் வண்ணம் - அத்தலைவர் (தம்மாட்டுக் கொண்ட காதலின்) நேர்த்தியையும், (அவர்) சோர்வு - (எம்மாட்டுள்ள) அவரது இகழ்ச்சியும், சொல்லும் - தன்னடக்கையால் தெரிவியாநின்றாள், உரைத்தும் - (வேண்டுமேல் யாமே தலைமகனின் நேர்மைகளை உனக்கு விளக்கமாகச்) சொல்வேம், நீ ஒழிதி - (ஆகலின், ஒன்றுங்கூறாது) நீ இவ்விடத்தை விட்டொழிவாயாக என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.) (ப-ரை.) நல்ல வயலூரனுடைய நன்மை யெல்லாம் நாங்களே அறிந்து உரைக்க வல்லேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேண்டா; இனி ஒழிவாயாக; நிறமிக்க நன் முல்லைமாலை சேர்ந்த இருங்கூந்தலையுடைய பரத்தையே சொல்லா
|