(விரி.) கதூஉம் : சொல்லிசை யளபெடை, போலான் : எதிர்மறை ஆண்பால் வினைமுற்று. “ஊரன் உண்டான். அதனால், கோதாயினேம். ஆகவே, போலன்,” என முடிக்க. வாளை - ஒரு வகை மீன். (39) இந்நிலத்தின்கண் இன்ன பெற்றியால் வருவாயாக வெனச் சொல்லியது ஆம்ப லணித்தழை யாரந் துயல்வருந் தீம்புன லூரன் மகளிவ ளாய்ந்தநறுந் தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த் தாமரை தன்னையர் பூ. (பத.) (தலைமகனே!) ஆம்பல் - ஆம்பற் பூக்களால், அணி அழகு செய்யப்பட்ட, ஆரம் தழை - சந்தனத்தழைகள், துயல் வரும் - அணியப் பெற்று அசைந்து வருகின்ற, தீம் புனல் ஊரன் - நல்ல நீர்சூழ்ந்த மருதநிலத்தூர்த் தலைவனின், மகள் இவள் - மகளாகிய இத் தலைமகள், ஆய்ந்த - நல்லவென்று ஆராய்ந்து கண்டுபிடித்த, நறும் தேம் மலர் - நல்ல மணமிக்க மலர், நீலம் - நீலோற்பலமாகும், தாமரை மலர் - தாமரைப் பூக்கள், செறி - நிரைத்துக்கட்டப்பட்ட, பிணையல் - மாலையே, தன் ஐயர் - இவன் தன் ஐயன்மார்களாகிய தந்தையும் தமையன்மார்களும் சூடுகின்ற, பூ - மலராகும். (ஆதலால், நீலத்தைக் கைக்கொண்டு, தாமரை மாலையைச் சூடி இரவுக் குறிக்கண் வருவாயாக, என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.) (ப-ரை.) ஆம்பலாற் செய்யப்பட்ட அணித் தழையும் ஆரமும் அல்குலின்கண்ணும், முலையின்கண்ணும் அசைந்து வருகின்ற தீம்புனலூரன் மகள் இவள் இவ்வூரின்கண் ஆய்ந்த நறுமலர் நீலம் பெண்பால் கட்டிச் சூடும் பூமாலை செறிந்த மலர்த் தாமரை மாலை அவள் ஐயன்மார்க்குச் சூடும் பூவாதலால், நீயும் தாமரை மாலையைச் சூடி வருவாயாக. (விரி.) இரவுக்குறி வேண்டிய தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி குறிப்பாக அவனும் அவனைச் சார்ந்தோரும் அணியுந் தலைமாலையும் பூவும் யா வென வினவ, தலைமகன் குறிப்
|