38
 

பறிந்து அவளுந் தலைமகளும் அவர்களைச் சார்ந்தோரும் அணியும் தழையும் பூவும் யா வென வினவ, தோழி குறிப்பாகக் கூறிய விடையாகு மிது. இங்குக் குறிப்பென்றது இரவுக் குறிக்கண் யாமறியுமாறு இன்ன பூச்சூடி இன்ன பெற்றியாக வரவேண்டுமென்பது. இதனை நச்சினார்க்கினியர் (தொல். கள. 23.) “இரவுக்குறி நேர்ந்த தோழி இந்நிலத்தின்கண் நீ வருங்கால் இன்ன பெற்றியான் வருவாயாக,” என்றது என்பர், தன்னையர் சூடு மாலையினைக் கூறியது இரவிற்காணும் பிறர் ஐயுறாதிருக்க வேண்டிப்போலும்.

(40)

மருதம் முற்றும்.