39
 

5. நெய்தல்

அல்ல குறிப்பட்டுப் பெயர்ந்த தோழி தலைமகன் சிறைப்புறத்
தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

நெய்தற் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானான்
செய்த குறியும்பொய் யாயின வாயிழையாய்!
ஐயகொ லான்றார் தொடர்பு.

(பத.) ஆய் இழையாய் - ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தலைவியே! நெய்தல் - நெய்தற்பூக்கள் நிறைந்த, படப்பை - கொல்லைகள், நிறை - மிகுந்துள்ள, கழி - கடற்கால்வாய்களையுடைய, தண் - குளிர்ந்த, சேர்ப்பன் - கடற்கரைத் தலைவன், கைதை சூழ் - தாழை மரங்கள் சூழ்ந்துள்ள, கானலுள் - கடற்கரைச் சோலையினிடத்தே, கண்ட நாள் - (முன்பு அவன் நம்மைக்) கண்ட நாளில் (நாம் அவற்கு எவ்வகை அருமையாகக் காணப்பட்டோமோ அவ்வகையினை), போல் ஆனான் - போன்று அவன் நமக்கு அருமையாகக் காணப்படலாயினான், செய்த - (அவனாற்) செய்யப்பட்ட, குறியும் - இரவுக்குறிகளும், பொய்யாயின - பொய்த்து நம்மை ஏமாற்றிவிட்டன, ஆன்று - மிகுதியும் அமைந்து, ஆர் - பொருந்திய, தொடர்பு - நட்பானது, ஐயகொல் - இங்ஙனம் ஐயத்திற்கிடமாய் நிலையாது போகும்போலும் (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்).

(ப-ரை.) நெய்தற்படப்பை நிறைகழித் தண் சேர்ப்பன் தாழை சூழ்ந்த கானலின்கண் நம்மைக்கண்ட முதனாள் போலானான்; அவனாற் செய்யப்பட்ட குறிகளும் பிழைத்தன; ஆயிழையாய்! அமைந்த நட்புச் செறிந்தன்றாகாதே யிருப்பது.

(விரி.) களவுப் புணர்ச்சியின் தொடக்கத்தில் தலைமகள் குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட்ட விடத்திற் காணப்படுவது ஆயமுதலியோரை அகற்றி வருதலான் அருமையா மாதலின், “கானலுட் கண்டநாட் போலானான்,” என லாயினள். குறி - தலைமகன் தன் வருகையை அறிவிக்கும்வண்ணஞ் செய்யுஞ் சில குறிப்புகள். அவை பறவைகளை எழுப்பல், நீர் நிலையிற் காய்கள்