44
 

(பத.) முருகு - நன்மணமானது, இயல் - பொருந்தியுள்ள, கானல் - கடற்கரைச் சோலையாகிய, ஆங்கண் - அவ்விடத்தே, குருகு இனம் - பறவைக் கூட்டம், ஆர்க்கும் - ஆரவாரிக்கும், கொடும் - வளைந்து செல்லும்படியான, கழி - கடற் கால்வாய்களையுடைய, சேர்ப்ப - துறைமுகத் தலைவனே, என் தோழி - என்னுடைய தோழியாகிய தலைமகள், உருவு அழிவு - அழகு அழிதற்குக் காரணமான, உள் நோய் - (நின்னை மணக்கக்கூடவில்லையே எனக் கருதும்) மன நோயானது, கெட - ஒழியும்படியாக, மருவி - (வரைதலை) மேற்கொண்டு, வரல் - நீ வருதலானது, உற - பொருந்தும்படியாக, வேண்டும் - (மிகுதியும்) விரும்புகின்றனள். (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)

(ப-ரை.) நறுவிரை யுளதாகிய கானலையுடைய அகன்ற கரையின்கட் குருகினம் ஆராநின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச் செய்யவேண்டும்; என்றோழி மாமை நிறம் அழியாநின்ற உள்ளத்தின்கண் நோயொழிய.

(விரி.) பழைய வுரைக்கண், “ஆராநின்ற,” எனக் காணப்படுவது, “ஆராவாரியாநின்ற”, என மாற்றப்படின், பொருட்குப் பொருந்துமாறு காணலாம்.

(46)

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியாற்
சொல்லெடுப்பப்பட்டுத் தலைமகள் சொல்லியது

அணிபூங் கழிக்கானல் அற்றைநாட் போலான்
மணியெழின் மேனி மலர்பசப் பூரத்
துணிகடற் சேர்ப்பன் றுறந்தான்கொ றோழி!
தணியுமென் மென்றோள் வளை.

(பத.) தோழி - தோழியே! துணி - தெளிவோடுகூடிய, கடல் சேர்ப்பன் - கடற் றுறைமுகத் தலைவன், அணி - அழகிய, பூ - பூக்கள் நிறைந்த, கழி - கடற் கால்வாய்களை யடுத்த, கானல் - கடற்கரைச் சோலையினிடத்தே, அற்றைநாள் - (களவுப்புணர்ச்சி நிகழ்ந்த) அந்த நாளில் (நம்மிடத்து அன்போடுகூட நடந்து கொண்டதனை), போலான் - போன்றிராதவனாய், மணி எழில் - செம்மணிபோன்ற செவ்வியினையுடைய, மேனி - உடலின்