46
 

வும், கண் - (கண்டாரின்) கண்களின், வாள் - ஒளியாகிய பார்வையினை, அறுப்ப - வருந்தும்படியாகவும், வரும் - வாராநிற்கும் (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்).

(ப-ரை.) ஒலிக்கு மணியையுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணினொளியை யறுப்ப, உயர்ந்த மணன்மேல் அலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில் கடிதாக நீங்க, செக்கர் நிறமாக நிறமிக்க மாலைப்பொழுதின்கண் நங் காதலன் வரும்.

(விரி.) தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகளை அதற்கு இணங்குவிப்பான் வேண்டி அவள்மாட்டுக் கூறிக் கொண்டதாகு மிது. ஒருவர்க்கு ஒரு நன்மையைச் செய்ய விரும்புவார், அவர் மறுத்தலை விரும்பாராய் முன்னரேயே அவர் அறிவின்றி அதனைச் செய்து முடித்துப் பின்னர்க் கூறும் மரபு பற்றித் தோழி தலைமகட்குத் தலைமகன் மாலை வருவன் எனக் கூறி நயப்பிக்கலாயினள்.

(48)

தலைமகன் பாங்கற்குச் சொல்லியது

மயில்கொன் மடவாள்கொல் மாநீர்த் திரையுட்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர்! குயில்பயிரும்
கன்னி யிளஞாழற் பூம்பொழி னோக்கிய
கண்ணின் வருந்துமென் னெஞ்சு.

(பத.) கேளீர் - கேண்மையிற் சிறந்த பாங்கீர்! குயில் பயிரும் - குயில் கூவி விளையாடும்படியான, கன்னி - முதன் முதலாகப் பூத்த, இளஞாழல் - இளமையான கோங்கமரங்களின், பூம்பொழில் - பூக்கள் நிறைந்த அச்சோலையினிடத்தே, (நிற்கின்ற தலைமகள்), மயில் கொல் - (தோகையுடன் கூடிய) மயில்தானோ, (அன்றி), மடவாள் கொல் - இளமையான இவ்வுலகப்பெண் தானோ, (அன்றி), மா - பெரிய, நீர் - நீர்நிறைந்த கடலின்கண், திரையுள் - அலைகளிடத்தே, பயில்வதோர் - வாழ்கின்ற ஒப்பற்ற, தெய்வம் கொல் - நீரரமகள் தானோ, நோக்கிய - (அவளை ஆராய்ந்து) பார்த்த, கண் இன் - என் கண்களைக் காட்டிலும் மிகுதியாக, என் நெஞ்சு - எனது மனம், வருந்தும் - துன்புறாநின்றது (என்று தலைமகன் தன்னுடைய பாங்கனிடங் கூறினான்).