47
 

(ப-ரை.) மயிலோ? மடவாளோ? மாநீர்த் திரையின்கண் பயின் றுறைவதோர் தெய்வங் கொல்லோ? கேளீரே! குயில்கள் கூவாநின்ற கன்னியிளஞாழற் பூம்பொழிலின்கண் அவரை நோக்கிய என் கண்ணினு மிக வருந்தாநின்ற தென் னெஞ்சு.

(விரி.) கொல் : ஐயப்பொருளின்கண் வந்துள்ளன. பாங்கன் - தோழன் : ஆண்டிலும் அறிவிலும் பெரியோனாகலின், “கேளீர்” எனப்பட்டான். இடந்தலைப்பாட்டிற்குப் பின்னர், தலைமகன் பாங்கனோடு கூடித் தன்னை வருத்திய தலைமகளை மற்றை நாளில் பாங்கற்குக் காட்டுவான் வந்து குறியிடைப்பட்ட தலைமகளைக் கண்டு கூறியதாகு மிது. இதனை, நச்சினார்க்கினியர், (தொல். கள. 12.) இரவுக்குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறிய தென்பர். இரவுக் குறிக்கண் தலைமகனோடு பாங்கன் செல்வதும் மரபு போலும்.

(49)

பகற்குறிக்கட் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி வரைவுகடாயது

பவளமு முத்தும் பளிங்கும் விரைஇப்
புகழக் கொணர்ந்து புறவடுக்கு முன்றில்
தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொ றோழி!
திகழந் திருவமர் மார்பு.

(பத.) தோழி - என்னுடைய (தோழியாகிய) தலைவியே! பவளமும் - பவழத்தினையும், முத்தும் - முத்தினையும், பளிங்கும் - படிகத்தினையும், விரைஇ - கலந்து, கொணர்ந்து - கொண்டு வந்து, புகழ - கண்டார் வியக்கும் வண்ணம், புறவு - (மனையின் சுற்றுப்புறமாகிய) கொல்லையிடத்தே, அடுக்கும் - சேர்க்கும்படியான, முன்றில் - இல்லின் முன்பாகத்தே, தவழ் - படிந்து செல்லும்படியான, திரை - அலைகளையுடைய, சேர்ப்பன் - கடற்கரைத் தலைவன், திகழும் - விளங்காநின்ற, திரு - மங்கலமாகிய மணவினையானது, அமர் - பொருந்தும்படி, மார்பு - மார்பாற் றழுவுதலாகிய இன்பத்தை, (தருதற் குரியனாய்), வருவான் கொல் - வருதலைச் செய்ய மாட்டானா? (என்று தோழி தலைமகளை வினவினள்.)

(ப-ரை.) பவளத்தினையும் முத்தினையும் பளிங்கினையும் கலந்து, பிறர் புகழக் கொண்டுவந்து, மனைசூழ்ந்த படப்பையை