யணைந்த முற்றத்தின்கண் வந்து வழங்குகின்ற திரையையுடைய சேர்ப்பன் விரைந்து வருவான் கொல்லோ? தோழி! முன்பு போலப் பொலிவழிந்திரா நின்ற அழகமைந்த மார்பும் பொலிவுடைத்தாய் இருந்ததாதலான், எம்பெருமான் விரைந்து வருமென்று முற்கொண்டு நமக்கு அறிவிக்கின்றது போலும். (விரி.) கொல் : ஐயவினாப் பொருள் கொண்டது. விரைஇ : சொல்லிசை யளபெடை. பழைய வுரையானது வரைவிடைப் பிரிந்த தலைமகன் வருகையை எதிர்பார்த்த தோழியின் கூற்றுக்கு இசைந்த வண்ணம் கண்ணழிக்கின்றது. துறைவிளக்கத் தொடரின் கருத்தினை யொட்டிப் பதவுரை எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டிற் பொருந்துமாற்றினை யாய்க. (50) நெய்தல் முற்றும்.
|