143

மிகுந்த, பழனம் - மருத நிலத்தூடே, பாய்ந்து - விரைந்து சென்று, அம் கண் - அழகிய கண்களைப் போன்ற, குவளை அம் பூவோடு - நீலோற்பலமாகிய அழகிய பூக்களுடனே, செம் கயல் மீன் - சிவந்த கயல் மீன்களையும், சூடி - அணிந்து கொண்டு - தவளையும் - தவளையினையும், மேற்கொண்டு - முதுகின்பேரிலே யுட்கர்ந்திருக்கும்படியாக வைத்துக் கொண்டு, வரும் - வருதலைச் செய்யும். (இஃதென்னே! என்று தலைவி தோழியினை நோக்கிக் கூறினாள்.)

(விரி.) கனை - ஒலி. புறத்து ஒழுக்கு-பரத்தையரைப் புணர்தல். இங்குத் தலைமகன் பரத்தையர்பாற் சேர்ந்து வாழுதலை மருத நிலக்கருப் பொருள்களிலேற்றித் தலைவி கூறுகின்றமையின் இஃது உள்ளுறை யுவமம் எனப்படும். எருமையாகிய தலைவன் கரும்பாகிய தலைவியை விலக்கி, குவளைப்பூ, மீன், தவளைகளாகிய பரததையர்பாற் சார்ந்து வாழலாயினன் என்பது கருத்து. ஆல் - உடனிகழ்ச்சிப் பொருள்.

(147)

இருணடந் தன்ன விருங்கோட் டெருமை
மருணடந்த மாப்பழன மாந்திப் - பொருணடந்த
கற்பேருங் கோட்டாற் கனைத்துத்தங் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும்.

[இதுவுமது]

(பத.) (தோழியே!) இருள் - இருளானது, நடந்தது அன்ன - நடக்கலாயிற்றுப் போலும் என்று சொல்லும் படியான, இரும் கோடு பெரிய கொம்புகளையுடைய, எருமை - எருமைகள், மருள் நடந்த - (கண்டார்க்கு வியப்பான்) மன மயக்கத்தைத் தரும்படியான, மா - சிறந்த, பழனம் - மருதநில விளைபொருள்களாகிய குவளை முதலியவற்றை, மாந்தி - உண்டு, பொருள் நடந்த - சாரமாகிய உறுதித் தன்மை நிறைந்த, கல் - கல்லினை, பேரும் கோட்டால் - பெயர்த்தற்குரிய கொம்புகளோடுகூடி, தம் - தம்முடைய, கன்று - கன்றுகளை, உள்ளி - நினைத்து கனைத்து - ஒலித்துக் கொண்டு, நெற் போர்வு-நெற்கதிர்ப் போர்களை, சூடி - மேற் கொண்டு, வரும் - வாரா நிற்கும். (இஃதென்னே! என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)