11

கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி
பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப்-பெருவரைமேற்
றேன்றேவர்க் கொக்கு மலைநாட! வாரலோ
வான்றேவர் கொட்கும் வழி.

[தோழி நெறி விலக்கியது]

(பத.) கருவிரல் - கரிய விரல்களையும், செம்முகம் - சிவந்த முகத்தினையும், வெண்பல் - வெண்மையான பற்களையும், சூல் - கருப்பத்தினையு முடைய, மந்தி - பெண் குரங்கானது, பரு விரலால் - தன் பெரிய விரல்களானே, பைஞ்சுனை - பாசிலை படர்ந்த சுனையின்கண்ணுள்ள, நீர்-நீரினை, தேவர்க்கு - தேவர்கட்கு, தூய் - வழிபாடாகத் தூவி, பெருவரைமேல் - பெரிய மலையுச்சியிலே (வைக்கப்பட்டுள்ள,) தேன் - தேன் கூடுகளை (யெடுத்து,) ஒக்கும் - கொடுத்தற்கிடமான, மலை நாட - மலைநாட்டிற்குரிய தலைவனே! வான் - தெய்வத்தன்மையான் மிகுந்த, தேவர் - தேவர்கள், கொட்கும் - நடமாடித் திரியும், வழி - (இம்மலை) வழியின் கண்ணே, வாரல் - நீ தலைவியை நாடி வருதலைச் செய்யாதிருப்பாயாக. (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

(ப-ரை.) கருவிரலினையுஞ் செம்முகத்தினையும் வெண்பல்லினையுமுடைய சூன்மந்தி தன் பெரிய விரலானே பைஞ்சுனையினீரைத் தூவி, பெருவரையின் மேலே வைத்த தேன்பொதிகளைத் தேவர்கட்குக் கொடுக்கும் மலைநாடனே! வாரா தொழிவாயாக; தேவர்கள் திரிதரும் வழியாம்.

(விரி.) தூஉய் - இசை நிறை யளபெடை. ஒக்குதல்-கொடுத்தல். “ஒண் ணிணப்பலி யொக்குவல்,” என்ற திருக்கோவையார் 235-ஆம் செய்யுள் அடியினை நோக்குக. ஓ - அசைநிலை.

(10)

கரவில் வளமலைக் கல்லருவி நாட!
உரவில் வலியா யொருநீ-யிரவின்