120

என் பேரில், ஊர் - ஊர்ந்து மேற்கொண்டு, கறுத்து - சினந்து, விருத்தியா - (என்னை வருத்துதலே தமது) தொழிலாக, கொண்டன - மேற்கொண்டுள்ளன, (இதற்கு, யான் என் செய்வல், எனத் தோழியிடம் தலைவி வருந்திக் கூறினாள்,)

(ப-ரை.) யானொருத்தி; எனக்கு ஒன்றல்ல பல பகைகள் என்னை மலைத்தலே தமக்கு ஒழுக்கமாகக் கொண்டன: வேறாகத் துணையைப் பிரிந்து பொருந்தில் மடற்பனை மேலிருந்த அன்றில், மாலைப்பொழுது, மழை பெயல், ஆம்பற்குழல். கடல் அன்றியே முகில்கள் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் மேல் வெகுண்டு.

(விரி.) என்னை - உருபுமயக்கம். "யான் ஒருத்தி; ஒன்றலவாகிய அன்றில், மாலை, வசி, ஆம்பல், கடல், கார் என்ற பல்பகை என்னை (வருத்துதலை) விருத்தியாக் கொண்டன," எனக் கூட்டுக. அன்றி, "யான் ஒருத்தி காதலனைவிட்டு வேறாப் பொருந்தின் ஒன்றலவாகிய மடல் முதலியனவாகச் சொல்லப்பட்ட பல்பகை என்னை விருத்தியாக் கொண்டன," எனலுமாம். பொருந்து - பொருத்து; எதுகை நோக்கி வலிந்து நின்றது.

(121)

கானந் தலைசெயக் காப்பார் குழற்றோன்ற
வேன மிடந்த மணியெதிரே - வான
நகுவதுபோன் மின்னாட நாணிலென் னாவி
யுகுவது போலு முடைந்து.

[இதுவு மது.]

(பத.) (தோழியே!) கானம் - முல்லை நிலங்கள், தலை செய - தழைத்து ஓங்கவும், காப்பார் - (ஆனிரை மேய்த்துப்) பாதுகாக்கும் இடையர்கள், குழல் - (ஊதும்) புல்லாங்குழலோசையானது, தோன்ற - வெளிப்படவும், ஏனம் - பன்றிகள், இடந்த - நிலத்தைக் கிளறியதாற்றோன்றிய, மணி - மாணிக்கங்களுக்கு, எதிரே - எதிராக, வானம - முகில்கள், நகுவதுபோல் - சிரிப்பதுபோல, மின் - மின்னல்கள், ஆட - ஒளிவிட்டுத் தோன்றவும், நாண் இல் - (இந்நிலை கண்டும் இறந்து படாமையான்) நாணமில்லாத, என் ஆவி - என்னுயிரானது, உடைந்து